Tuesday, May 29, 2012

ஹெல்மெட் இருந்தால்தான்...


' ஹெல்மெட் இருந்தால்தான் வண்டி ஸ்டார்ட் ஆகும் '
அசத்தலான புது கண்டுபிடிப்பு .
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படிக்கும் மாணவிகளான ஆர்த்தி, லைலாபானு, வினோதா ஆகிய மூவரும், ஹெல்மெட் அணியாமல் வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியாத வகையில் புதிய கருவியை கண்டுபிடித்துள்ளனர் . ' ரிமோட் சென்சிங் புரோகிராம் ' என்ற தொழில்நுட்ப முறைப்படி இயங்கும் இந்த கருவி பொருத்தப்பட்டுள்ள ஹெல்மெட்டை வாகன ஓட்டிகள் அணிந்தால் மட்டுமே அதற்குரிய இருசக்கர வாகனத்தை இயக்க முடியும் . மேலும், டூவீலர் உரிமையாளரைத் தவிர மற்றவர்கள் அதை அணிந்து ஸ்டார்ட் செய்தால் வண்டி ஸ்டார்ட் ஆகாது என்பதும் இதன் கூடுதல் சிறப்பம்சம். இதனால் வாகனம் திருட்டுபோவதும் தவிர்க்கப்படும் .
அண்மையில் அகமதாபாத்தில் இளம் விஞ்ஞானிகளுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. இதில், நாடெங்கிலும் உள்ள 12 ஆயிரத்து 800 பள்ளிகள் பங்கேற்றன.
இவற்றில் 8 ஆயிரம் அறிவியல் கண்டுபிடிப்பு சாதனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன . அதில் 32 புதிய கண்டுபிடிப்புகள் சிறப்பானதாக அறிவிக்கப்பட்டன . தேர்வு செய்யப்பட்டவைகளில் நன்னிலம் பள்ளி மாணவிகளின் இந்த கண்டுபிடிப்பு சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு பாராட்டு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
--- தினமலர், மார்ச் 4 , 2012 .

No comments: