Saturday, July 23, 2016

டிப்ஸ்...டிப்ஸ்...

*   வேர்க்கடலை, பொட்டுக்கடலை போன்றவற்றை உருண்டை பிடிக்க வெல்ல பாகு காய்ச்சும்போது, வெல்லத்துடன் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் சர்க்கரையையும் சேர்த்துக் காய்ச்சினால், உருண்டைகள் கரகரப்புடனும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமலும் இருக்கும்.
*   கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை ஃபிரிட்ஜில் வைக்கும் போது சீக்கிரமே அழுகிவிடுகிறதா?  அவற்றை ஈரமில்லாமல், ஒரு செய்திதாளில் சுற்றி, கறுப்பு நிற பிளாஸ்டிக் பையில் வைத்து சுருட்டி ஃபிரிட்ஜில் வைத்து விடுங்கள்.  பத்து நாட்களானாலும், அழுகாமல் அப்படியே பசுமையாக இருக்கும்.
*   சப்பாத்தி மிருதுவாக இருக்க கொஞ்சம் எண்ணெய் சேர்த்து மாவு பிசைவோம்.  அதற்கு பதில், முதலில் எண்ணெய் சேர்க்காமல் மாவு பிசையவும்.  பிறகு, ஒவ்வொரு சப்பாத்தியையும் ஒரு சிறு அப்பளம் போல் உருட்டி, அதன் மேல் எண்ணெயைத் தடவி, நான்காக மடித்து மீண்டும் சப்பாத்தியைத் திரட்டி சுட்டால் மென்மையாக இருக்கும்.  குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.  எண்ணெய்க்கு பதில் நெய் தடவலாம்.  எண்ணெய் வேடாதவர்கள் எதுவும் தடவாமல் அப்படியே சப்பாத்தி செய்து கொடுக்கலாம்.
*   காலையில் செய்த இட்லிகள் மீதமிருக்கிறதா?  இட்லிகளின் மீது இருபுறமும் எண்ணெய் அல்லது நெய் தடவி, சூடான தோசைக்கல்லில் போட்டு குறைந்த தீயில், பிரவுன் நிறம் வரும் வரை சுட்டு எடுத்தால்...மொறுமொறுவென்று ஆகிவிடும்.  இதைத் தக்காளி சாஸுடன் குழந்தைகளுக்கும் கொடுத்தால்... சட்டென்று காலியாகி விடும்.  இட்லிகள் தடிமனாக இருந்தால், நடுவில் வெட்டி இரண்டு மெல்லி வட்டங்களாக சுடலாம்.
-- அவள் விகடன்.  5-4-14.
-- இதழ் உதவி :   இதழ் உதவி : புலவர் மா. கணபதி, மாத்தூர்.  சென்னை. 68.

No comments: