மருத்துவமனைக் கட்டிலில் படுத்துக்கொண்டே யோசித்திருப்பார்கள்போல ! மருத்துவர்களை மனிதக் கடவுளாக நாம் போற்றிக்கொண்டிருக்க, 'நோயாளிகள் விருப்பப்பட்டால் மருத்துவர்கள் அவர்களுடன் ரொமான்ஸில் ஈடுபடலாம்' என்று அதிர்ச்சி அனுமதி அளித்திருக்கிறது பிரிட்டன் மருத்துவ கவுன்சில். மருத்துவர்கள் நோயாளிகளோடு ரொமான்ஸில் ஈடுபடலாம். விருப்பம் இருதால் காதலிக்கலாம் என்று அறிவித்திருக்கும் மருத்துவ கவுன்சில், அதற்கெனச் சில விதிமுறைகளையும் விதித்திருக்கிறது. அதன்படி டாக்டர்கள் தான் சிகிச்சை அளித்த முன்னாள் நோயாளிகளுடன் மட்டுமே காதல்வயப்படாலாமாம். காதல் புரியும் நோக்குடன் நோயாளியின் வீட்டுக்கு அடிக்கடி செல்லக் கூடாதாம். ஆதரவும் எதிர்ப்புமாக சலசலதுக் கிடக்கிறது மருத்துவ வட்டாரம். - இதெல்லாம் நல்லதுக்கில்லை!
-- இன்பாக்ஸ்
-- ஆனந்த விகடன். 10-04-2013.
-- இன்பாக்ஸ்
-- ஆனந்த விகடன். 10-04-2013.
No comments:
Post a Comment