Tuesday, January 31, 2017

உடல் உறுப்புகள்.

(  இதயம்,  தும்மல்,  நாக்கு,  கண்,  முடி,  எலும்பு,  தோல் ).
     மனித  உடலில்  உள்ள  உறுப்புகளிலேயே  கடிமையாக  உழைக்கும்  தசை  இதயம்தான்.  ஒரு  லாரி  30 கி.மீ.  ஓடத்  தேவையான  சக்தியை  ஒரு  நாளில்  அது  உருவாக்குகிறது.  நமது  வாழ்நாளில்  அது  உருவாக்கும்  சக்தியைக்  கொண்டு  நிலாவுக்குச்  சென்றுவிட்டுத்  திரும்பிவிடலாமாம்,
     ஒருவரது  சராசரி  வாழ்நாளில்  இதயம்  பம்ப்  செய்யும்  ரத்தத்தின்  அளவு  15 லட்சம்  பேரல் ( 1 பேரல்  என்பது 120 லிட்டர் ).
அத்துடன்  மனித  இதயத்தை  வெளியே  எடுத்து  வைத்தால்,  அது  ரத்தத்தைப்  பீய்ச்சி  அடிக்கும்  உயரம்  9 மீட்டர்.
     நமது  ஒற்றை  தும்மலின்  வேகம்  எவ்வளவு  தெரியுமா?  மணிக்கு  64  கி.மீ.  அதாவது,  ஒரு  புலி  ஓடும்  வேகம்.
     நமது  நாக்கில்  10,000  சுவை  உணரும்  மொட்டுகள்  உள்ளன.  நாக்கில்  சின்னச்  சின்ன  மேடாக  இருப்பவைதான்  இந்த
மொட்டுகள்.  சுவையை  அறிய  முகர்ந்துபார்க்கும்  திறனும்  அவசியம்.  மூக்கு  அடைத்திருக்கும்போது  சாப்பிடும்  உணவின்  சுவை  எப்படி  இருந்தது  என்று  யோசித்துப்  பாருங்கள்.
     தொடுதல்,  கேட்டலுக்கு  ஏற்ப  எதிர்வினை  ஆற்றும்  வகையில்  பார்வையற்றவர்களின்  கண்  மேலுறை  மாறிவிடுகிறது.  இதனால்தான்,  பார்வையற்றவர்கள்  குச்சிகளைக்  கொண்டும்,  தொட்டுப்  பார்த்தும்  பயணிக்க  முடிகிறது.
     நம்  தலையில்  உள்ள  ஒவ்வொரு  முடியும்  ஒவ்வொரு  மாதத்துக்கும்  6  மி.மீ., அதாவது  அரை  சென்டிமீட்டரைவிட  கொஞ்சம்  அதிகமாக  வளரும்.  இப்படியே  6  ஆண்டுகள்  வளர்ந்தபின்  அதற்கு  வயதாகிவிடும்.  அதனால்  அந்த  முடி  விழுந்துவிட்டு,  அதே  இடத்தில்  புதிய  முடி  முளைக்க  ஆரம்பிக்கும்.
     நாம்  பிறக்கும்போது  300 எலும்புகளுடன்  பிறக்கிறோம்.  ஆனால்,  மனிதனாக  வளர்ந்த  பிறகு  206  எலும்புகளே  இருக்கின்றன.  இதற்குக்  காரணம்  என்னவென்றால்,  சில  எலும்புகள்  ஒன்று  சேர்ந்துவிடுவதுதான்.
     நாம்  நினைப்பதற்கு  மாறாக,  தோல்தான்  நம்  உடலில்  உள்ள  மிகப்  பெரிய  உறுப்பு.  தொடர்ச்சியாக  வளர்ந்துகொண்டிருக்கும்  உறுப்பும்கூட .  நமது  தோல்  ஒரு  நிமிடத்துக்கு  50,000  செல்களை  இழக்கிறது.  நமது  வாழ்நாளில்  வளரும்  மொத்தத்  தோலின்  எடை  18  கிலோ.
--  தொகுப்பு :  ஆதி.  ( நம்பமுடிகிறதா? ).  மாயாபஜார்.
-- 'தி இந்து' நாளிதழ். புதன், டிசம்பர்  3, 2014.   

No comments: