Sunday, January 8, 2017

'டெரெஸ்ஸோ' தரைகள் !

   தரை அமைப்பது, மூன்று வகையாக பிரித்து பார்க்கப்படுகிறது.  இதன்படி , கலவையால் உருவாக்கப்படுவது,  இயற்கை அல்லது செயற்கை கற்களை கொண்டு, அடுத்து இயற்கையான அல்லது செயற்கையான மரம், சணல், தேங்காய் நார் போன்ற பொருள்களை கொண்டு அமைப்பது.  இதில், உங்கள் வீட்டின் நிலை, உங்கள் நிதி நிலை, விருப்பம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தரை அமைக்கும் முறையை நீங்கள் தீர்மானிக்கலாம்.
     கலவையை கொண்டு தரை அமைப்பதில், அண்மைக்காலமாக,'டெரெஸ்ஸோ' தரைகள்  பிரபலமாகி வருகின்றன.  வழக்கமான சிமென்ட்  மற்றும் சிவப்பு நிறத் தரைகளுக்கு மாற்றாக, பதிகற்கள் உதவியின்றி, வெள்ளை நிறத்தில் தரைகள் அமைப்பதே 'டெரெஸ்ஸோ' தரைகள் எனப்படும்.
     சிமென்ட் , மணல் ஆகியவற்றை, 1:1 என்ற விகிதத்தில் சேர்த்து தயாரிக்கப்பட்ட கலவையை, ஒரு அங்குலம் உயரத்துக்கு பரப்பி, சமதளத்தை ஏற்படுத்த வேண்டும்.  இதன்மேல், ஒயிட் சிமென்ட் , 3 பங்கு, மார்பிள் பவுடர், 1 பங்கு எடுத்துக்கொண்டு, அதில், மார்பிள் சிப்ஸ், பிக்மெண்ட் ஆக்ஸைடு சேர்த்த கலவையை, தயார் செய்ய வேண்டும்.
     இக்கலவையை, உங்களுக்கு வேண்டுய வடிவமைப்பில், தரையில் பரப்பினால், பதிகற்கள் உதவியின்றி பளபளப்பான பளீச் தரைகளை பெறமுடியும்.  பணி முடிந்ததில் இருந்து, 7 நாட்களுக்கு, இதன் மேல் தன்ணீர் தெளிக்க வேண்டும்.
-- கனவுஇல்லம்.
-- தினமலர். சென்னை பதிப்பு.  சனி, 31-5-2014.
-- இதழ் உதவி : SB. மாதவன்,  விருகம்பாக்கம். சென்னை .92. 

No comments: