உலக வரலாற்றில் கண்ணீரால் பதிவு செய்யப்பட்ட ' சோக தினம் , இன்று 26 டிசம்பர். ஜப்பானில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ' சுனாமி' என்ற சொல் உலகம் முழுவதும் அழியாத வடுவை ஏற்படுத்திய நாள் .
2004 -ல் இதே நாளில், இந்தோனேஷியாவின் சுமத்ரா பகுதியில் கடலுக்குள் 9 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பம் 10 நிமிடம் நீடித்தது . இதனால் , சுனாமி அலைகள் அடுக்கடுக்காக எழும்பி 11 நாடுகளைப் பந்தாடியது. ரிக்டர் அளவுகோல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பதிவான 2 -வது பெரிய பூகம்பம் என்பதுடன் , அதிக நேரம் நீடித்த நிலநடுக்கத்தில் , இதற்கே முதல் இடம் .
இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானில் ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டு போல 23 ஆயிரம் மடங்கு சக்தியை அந்த நிலநடுக்கம் வெளிப்படுத்தியது .
ஐ .நா .வின் தற்காலிகப் புள்ளிவிவரப்படி , சுனாமியால் மொத்த உயிர்ப்பலி 1.84 லட்சம் ; காயமடைந்தோர் 1.25 லட்சம் ; மாயமானோர் , 45 ஆயிரம் ; சொந்த இடங்களை இழந்தோர் 17 லட்சம் ; சர்வதேச நிவாரண உதவி 40 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கிறது .
2004 - ன் சுனாமி ஒரே நாளில் ஓய்ந்துபோனாலும் அதன் பாதிப்பு , சோகங்களின் கண்ணீர் இன்னும் காய்ந்து போகவில்லை .
--- தினமலர் . 26 -12 -2008 .
No comments:
Post a Comment