கஜகர்ணம் : யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது. அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல் பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள். அவர்களை ' கஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
அஜகர்ணம் : ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும். அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள். திரும்பிப் பார்க்க மாட்டார்கள். அவர்களை ' அஜகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
கோகர்ணம் : பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும் அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும். அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள் .இவர்களை 'கோகர்ணம் ' போடுபவர்கள் என்று அழைக்கிறோம் .
--- கிருபானந்த வாரியார் . ( 13 - 08 - 1978 ) .
No comments:
Post a Comment