Wednesday, February 18, 2009

மரபணு

மரபணு கோழி, பருத்தி !
மரபணு மாற்றத்துக்கு மிகச் சரியான உதாரணம், கோழி. மரபணு மாற்றத்தால் பிராய்லர் கோழிகள் சதைப்பகுதி மட்டும் அதிகமாக வளரும். இதனாலேயே பிராய்லர் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி மிகக் குறைவு. அவ்வப்போது உலகத்தையே மிரட்டும் பறவைக் காய்ச்சல் நோய்க்கு உடனடியாகப் பலியாவது இந்த பிராய்லர் கோழிகள்தான்.
பருத்திச் செடி, புழுத் தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகும்.அந்தப் புழுக்களுக்கு எதிரான ஒரு விஷயம் மண்ணிலிருக்கும் பி.டி. எனப்படும் பேசிலஸ் துரிஞ்சியான்சிஸ் என்கிற நுண்ணுயிரிகளிடம் இருக்கிறது. அந்த நுண்ணுயிரிகளின் ஜீன்களை எடுத்து பருத்தியின் மரபணுவில் செலுத்தினார்கள். புழு தாக்காத பருத்தி என்கிற அறிமுகத்தோடு பி.டி. காட்டன் என்ற புதுவகைப் பருத்தியை இதன்முலம் உருவாக்கினார்கள்.இந்தப் பருத்தியின் விதைக்கு அதிக விலை கொடுக்கவேண்டும்.அதிக செலவு பண்ணி குறைந்த மகசூல் எடுத்ததால், விவசாயிகளுக்கு நஷ்டம்தான் கிடைத்தது. கூடுதல் பிரச்னையாக பி.டி. காட்டனில் இருக்கும் விஷயத்தைச் சமாளிகும் திறன் அந்தப் பூச்சிகளுக்கு வந்து விட்டது.இதனால் சாதாரண பருத்திக்கு பூச்சிக் கொல்லி விஷம் அடித்தாலும் பூச்சி தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது. கடன் தொல்லையால் மஹாராஷ்டிரா, ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் அர்பாட்புஷ்டாய் ( Dr.Arpad pusztai ) என்கிற விஞ்ஞானி ஒரு எலிக்கு மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களைத் தொடர்ந்து கொடுத்துப் பரிசோதித்தார். கொஞ்ச நாளிலேயே சிறுநீரகமும்,நுரையீரலும் சுருங்கி கேன்ஸ்ர் கட்டிகள் வந்து இறந்துவிட்டது அந்த எலி. இந்தப் பரிசோதனை முடிவுகள் வெளியே வந்ததும், மரபணு மாற்று உணவுப் பொருட்களுக்கான எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துவிட்டன. இந்த உணவுகளைச் சாப்பிடுவதால் பலவகையான அலர்ஜிகள்,
கேன்ஸர் கட்டிகள், அடுத்தடுத்த தலைமுறையோட குணநலன்களைப் பாதிக்கும் அம்சங்கள் வரும் என்று உறுதி செய்திருக்கிறார்கள்
அணுசக்தி ஒப்பந்தத்தோடு சேர்த்து, மொத்தம் மூணு ஒப்பந்தங்கள் அமெரிக்காவுடன் கையெழுத்தாக உள்ளன.அதில் முக்கியமானது Indo - Us Knowledge Initiative On agriculture. இதன்படி, இந்தியாவிம் பாரம்பரிய விவசாயத்தைக் காப்பாற்ற அமெரிக்கா திட்டம் போட்டுத் தருமாம்.இது நிறைவேறினால், இந்திய விவசாயிகள் எதைப் பயிர் செய்ய வேண்டும், இந்திய மக்கள் எதைச் சாப்பிட வேண்டும் என்பதையெல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள்தான் தீர்மானிக்கும்.
--வெற்றிச்செல்வன். ஆனந்தவிகடன். ( 16-07-2008 ).

No comments: