ஒரு பேப்பரில் 1 முதல் 31 வரையிலான எண்களை எழுதுங்கள் . உங்கள் நண்பரிடம் அதைக் காண்பித்துவிட்டு, திரும்பி நின்று கொள்ளுங்கள் .
நண்பரிடம், " இதில் அடுத்தடுத்து எண்களாக ஏதாவது 3 எண்களை வட்டமிட்டுக் கொள் . அந்த எண்களை என்னிடம் கூற வேண்டாம் . அந்த எண்களைக் கூட்டிவரும் தொகையை மட்டும் என்னிடம் சொல் . நீ வட்டமிட்ட எண்களை நான் சொல்கிறேன் ! " என்று ' பில்டெப் ' கொடுங்கள் .
நண்பர் ஒரு எண்ணைச் சொல்வார் .
அதன்பின், அவர் வட்டமிட்ட எண்களை நீங்கள் கண்டுபிடித்து சொல்வது எப்படி ?
ஒரு உதாரணம் :
உங்கள் நண்பர் 16, 17, 18 ஆகிய எண்களை வட்டமிட்டுள்ளார் என்று வைத்துக் கொள்வோம் . இவற்றின் கூட்டுத்தொகை 51 . இதை அவர் உங்களிடம் சொல்வார் .
இந்த எண்ணை நீங்கள் 3--ஆல் வகுக்க வேண்டும் . அதில் கிடைக்கும் விடைதான் அவர் வட்டமிட்ட எண்களில் மத்தியில் உள்ள எண் . அதன் முன்னும் பின்னும் உள்ள எண்கள்தான், அவர் வட்டமிட்ட பிற 2 எண்கள் .
இந்த உதாரணத்தில் 51 ஐ 3 ஆல் வகுத்தால் 17; அதன் முன்னும் பின்னும் உள்ள எண்கள் 16, 18 ; எனவே அவரிடம், " நீ வட்டமிட்ட எண்கள் 16, 17, 18 " என்று சொல்லி அசத்திவிடலாம் !
-- தினமலர் , ஆகஸ்ட் , 27 , 2010.
No comments:
Post a Comment