" இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்கும் முதல் தேவை , உயிர் பிழைத்தல்தான் ! அதாவது Survival . அதற்கு நீரும் , உணவும் தேவை .
அடுத்த தேவை... ஆடை , வீடு , அணிகலன் , வாகனம் போன்றவை . அதாவது growth . அதற்கு தொழில் நுட்ப அறிவும் பணமும் தேவை .
அடுத்த தேவை... உயர்நிலை . அதாவது Sub - limity . உயிரும் பொருளும் பெற்றதோடு நில்லாமல் , ஞானத்தை அடையவும் முயற்சித்து , அதை எட்டும்போதுதான் அவன் முழு மனிதனாகிறான்
இதன் அடிப்படையில்தான் நவராத்திரி கொலுவின் ஒன்பது படிகளும் வைக்கப்படுகின்றன .
கீழே உள்ள மூன்று படிகளில் உயிர் வளர்க்கத் தேவையான அடிப்படைப் பொருள்களைக் காட்சிக்கு வைக்கிறோம் . ( மண் , வயல் , நதி , உழவன் ,, பறவை , தானியம் , காய்கனி போன்றவை ) .
நடுவிலிருக்கும் மூன்று படிகளில் நமது வளர்ச்சியையும் பாதுகாப்பையும் எடுத்துக்காட்டும் பொருள்கள் இடம் பிடிக்கின்றன . ( நவீன வீடுகள் , நாணயங்கள் , வாகனங்கள் , நூதனப் பொருள்கள் , நாகரிக மனிதர்கள் , ராஜாராணி , சிப்பாய்கள் போன்றவை .)
மேலே உள்ள மூன்று படிகளில் ஞானத்தைக் குறிக்கும் கலையை வளர்க்கும் அம்சங்கள் , தெய்விகக் குறியீடுகள் வைக்கப்படுகின்றன . ( கலைஞர்கள் , மகான்கள் , கடவுள் சிலைகள் போன்றவை .)
உயிர்களை ஜனிக்க வைப்பவள் துர்க்கை .
பொருள் வளம் தருபவள் லக்ஷ்மி .
ஞானம் தருபவள் சரஸ்வது .
இதன் அடிப்படையில்தான் முப்பெரும் தேவியரை வணங்கி , மூன்று சக்திகளுக்கு மூன்று ராத்திரிகள் என நவராத்திரி கொண்டாடி மகிழ்கிறோம் !
ஆல்ஃபிரட் மார்ஷல் , ஹெர்ஸ்பெர்க் , மாஸ்லோ போன்ற பொருளாதார மனவியல் நிபுணர்களின் தியரிகளைப் படித்தால் , அவை நமது நவராத்திரிக் கோட்பாடுகளுடன் அச்சு அசலாக ஒத்துப் போவதைக் கண்டு அசந்து போகலாம் !
முதலில் உயிர் பிழைத்தாலே போதும் என்ற கீழ்நிலை , பிற்பாடு , வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் ஆர்வம் . கிடைத்த செல்வத்தைப் பாதுகாக்கும் முயற்சிகள் ... எல்லாம் ஓரளவு கிடைத்தபின் , கலை , இலக்கியத்தில் நாட்டம்... அதைத் தொடர்ந்து ஞானமும் மோனமும் வேண்டும் உயர் நிலை . அதைப் பெறவே... இந்த மனிதப்பிறவி . எல்லாமே படிப்படியான உயர்வு !
--- அனுஷா நடராஜன், மங்கையர் மலர் .செப்டம்பர் 2010 . இதழ் உதவி : N. கிரி , ( News Agent - Thirunallar ). கொல்லுமாங்குடி .
No comments:
Post a Comment