ஒரு ராஜா தன் மந்திரியிடம், . தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் ? சொல்லுங்கள் ' என்று கேட்டார் .
மந்திரி உடனே அதற்கு பதில் சொல்லாமல், கொஞ்சம் களிமண், பஞ்சு, சர்க்கரை மூன்றையும் எடுத்து வந்தார் . ஒவ்வொன்றையும் தனித்தனியாகத் தண்ணீரில் போட்டார் . களிமண்ணோடு கலந்த தண்ணீர், கலங்கி சேறானது . பஞ்சு முடிந்த அளவு தண்ணீரை உறிஞ்சியது . சர்க்கரை தன்னைக் கரைத்துக்கொண்டு நீரையும் இனிப்பாக்கியது .
இதைக் கவனித்துக் கொண்டிருந்த அரசனிடம், ' மன்னா... தானும் கெட்டு சமூகத்தையும் கெடுக்கிறவன் களிமண் . தான் மட்டும் கெட்டுப் போகிறவன் பஞ்சு . தன்னையே கரைத்து, தான் சேரும் பொருளையும் சுவையுள்ளதாக்கும் சர்க்கரை போன்று சமூகத்தை வாழ வைக்கிறவந்தான் நல்ல தலைவன் ...' என்றார் மந்திரி .
ஆம் ! தன்னலம் துறத்தல்தானே தலைவனுக்கு அழகு !
--- சாரதாநம்பி ஆரூரன் . சொற்பொழிவாளர் . அவள் விகடன் , ஜனவரி 30 , 2004 .
No comments:
Post a Comment