மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்தபொது, ஒரு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்டார் .சிறையில் அடைத்தவர் ஜெனரல் ஸ்மட்ஸ் என்பவர் . இருந்தாலும் அந்த அதிகாரி தமது நூலகத்தில்லிருந்து சிறந்த நூல்களை காந்தியடிகள் படிப்பதற்காக அனுப்பி வந்தார் .
சிறையிலிருந்த காந்தியடிகள் செருப்பு தைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் . விடுதலையானதும் ஜெனரல் ஸ்மட்ஸை காணஸ் சென்றார் காந்திஜி . அப்போது தாம் தயாரித்திருந்த ஒரு ஜோடி செருப்புகளை அவருக்கு பரிசாக அளித்தார் . நெகிழ்ந்து போய் ஸ்மட்ஸ் அதை பெற்றுக் கொண்டார் .
பின்னாளில் இந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்த ஸ்மட்ஸ், ' நான் சிறையில் தள்ளிய அந்த மனிதரின் ( காந்திஜி ) மகத்தான தயாள குணத்தை முதன்முதலில் கண்டுகொண்டேன் . அவர் தந்த பரிசு சாதாரணமாயினும் , அவற்றின் மீது கால் வைக்க எனக்கு மனம் வரவில்லை . அன்பு, தயாள குணம் இரண்டுக்கும் நினைவுச் சின்னமாக விளங்கும் அந்தக் காலணியை மிகவும் கவனமாக இன்றளவும் பாதுகாத்து வருகிறேன் ' என்றார் .
-- ப்ரியாபாலு தொகுத்த ' பிரபலங்கள் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள் ' நூலிலிருந்து ... தினகரன் .3 / 1 / 2010.
No comments:
Post a Comment