* புது பாத்திரங்களின் அடியில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கரை பாத்திரத்தில் ஒட்டாமல் எடுக்க இதோ பிடியுங்கள் டிப்ஸ்... ஸ்டிக்கர் இருக்கிற இடத்தின் பின்புறத்தை நெருப்பில் சில நொடிகள் காட்டி சூடாக்குங்கள் . இப்போது உரித்தால் சட்டென்று கையில் வந்து விடும் ஸ்டிக்கர் .
* அதிரசம், பூரி, வடை, அப்பம் போன்ற எண்ணெயில் பொரித்த பதார்த்தங்களை பாத்திரத்தில் எடுத்து வைக்கும்போது அதில் சொதசொதவென்று எண்ணெய் ஊறியிருக்கும் . இதைத் தவிர்க்க பாத்திரத்தின் அடியில் நாலைந்து டேபிள் ஸ்பூன்கள் அல்லது ஃபோர்க்குகளை சதுர வடிவில் வைத்து அவற்றின் மேல் எண்ணெய் பண்டங்களை வைத்து விடுங்கள் . எண்ணெயில் இருந்து தப்பிக்கலாம் .
* பால் காய்ச்சும்போது திரிந்து விட்டால், பால் ஓரளவு ஆறியதும் மிக்ஸியிலோ, முட்டை பீட்டரிலோ அடித்து ( கெட்டி மோர் போல வரும் ), உறை ஊற்றி வைத்தால் கெட்டியான தயிராக உறைந்துவிடும் ( கெட்டிப் போன பாலாக இல்லாமல் வேறு காரணங்களால் திரிந்து விட்டால் மட்டும் இப்படிச் செய்ய வேண்டும் ) .
* அன்றாடம் உபயோகிக்கும் பாத்திரங்களில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கைப் போக்க வேண்டுமா ? பாத்திரத்தில் அரை ஸ்பூன் இட்லி மாவை தடவி விட்டு கழுவுங்கள் .பிசுக்கு முழுவதும் அகன்று விடும் .
---- அவள் விகடன் ,18 / 01 / 2008
No comments:
Post a Comment