உலகின் மிகப்பெரிய சூரிய ஆய்வு தொலைநோக்கியை இந்தியா, அமைக்கிறது . காஷ்மீர் லடாக் பகுதியில், இமயமலை அடிவாரமான மோராக்கில் உள்ள பேன்கோங் ஏரி அருகில் இது அமைக்கப்படுகிறது .
2 மீட்டர் பிரிவு சூரிய ஆய்வு தொலைநோக்கி :
சூரிய ஒளியை உள்வாங்கும் லென்ஸ் பரப்பு அதிகமாக இருந்தா;ல், ஒவ்வொரு நொடியிலும் சேகரிக்கப்படும் கதிர்களின் அளவும் அதிகமாக இருக்கும் .இதில் 2 மீட்டர் குறுக்களவு கொண்ட லென்ஸ் இருப்பதால், துல்லியமான தகவல்களைத் திரட்ட முடியும் . இப்போது அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய சூரிய ஆய்வு தொலைநோக்கிகளின் லென்ஸ் குறுக்களவு 1.6 மீட்டர்தான் !
ரூ. 150 கோடி :
இந்த தொலநோக்கியை அமைக்கும் திட்டத்தின் மதிப்பீடு தொகை ரூ. 150 கோடி .
பேன்கோங்கில் ஏன் ?
* வருடாந்திர வெயில் அளவு அதிகமாக இருக்கும் பகுதிகளிலும், உயரமான பகுதிகளிலும் சூரிய ஆய்வுகளை
நடத்தினால்தான், துல்லியமான தகவல்களைத் திரட்ட முடியும் .
* பேன்கோங் ஏரி, கடல் மட்டத்தில் இருந்து 14 ஆயிரத்து 270 அடி உயரத்தில் உள்ளது ; இங்கு, வருடாந்திர வெயில் அளவும் அதிகம் .
* இது, வாகனப் போக்குவரத்தோ குடியிருப்புகளோ இல்லாத பகுதி . எனவே, நச்சு வாயுக்களால் சுற்றுப்புற வெப்பம்
அதிகரிக்காது . எனவே, சூரிய ஆய்வில் வெளி காரணிகளின் தலையீடு ஏற்பட வாய்ப்பில்லை .
சிறப்புகள் :
* ஜப்பானுக்கும் ஐரோப்பாவுக்கும் மத்தியில் சூரிய ஆய்வு தொலைநோக்கி எதுவும் இல்லை . அந்த குறைபாட்டை
இந்த தொலைநோக்கி போக்குகிறது
.* இந்த தொலைநோக்கி மூலம் பகலில் மட்டுமல்லாது இரவிலும் ஆய்வுகள் நடத்தலாம் . இப்படி இரட்டை பயன்பாடு கொண்ட தொலைநோக்கிகள், உலக அளவில் மிகவும் குறைவாகவே உள்ளன .
* சூரியனைச் சுற்றியுள்ள மிங்காந்தப் புலங்களின் தன்மை பற்றிய தகவல்களை இந்த தொலைநோக்கி மூலம் விரிவாக
அறியலாம் .
* அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் கிட் பீக் தேசிய ஆய்வுமையத்தில் மெக்மேத் பியர்ஸ் சூரிய ஆய்வு தொலைநோக்கி
உள்ளது . இதன் லென்ஸின் குறுக்களவு 1. 6 மீட்டர் .
* அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியில் பிக் பியர் ஏரி அருகில் உள்ள சூரிய ஆய்வு மையத்தில் உள்ள சூரிய ஆய்வு
தொலைநோக்கி உள்ளது . இதன் லென்ஸின் குறுக்களவும் 1.6 மீட்டர்தான் .
--- தினமலர் .22 . 1 . 2012 .