Tuesday, April 10, 2012

' தானே ' புயல் .


" பொதுவாக ஒரு புயலைக் கணிக்க காற்று வீசும் திசை; காற்றின் அழுத்தம் ; ' ரேடார் ' , கம்ப்யூட்டர் பதிவுகள் என நான்கு அம்சங்கள் முக்கியம் . காற்றின் திரட்டு மொத்தமாக மேலே எழும்பும் . அப்போது அதன் குமிழ்ப் பகுதி சிதைந்துவிட்டால் காற்று நாலா பக்கமும் வீசும் . மாறாக, சிதையாமல் இருந்தால், ஒரு குறிப்பிட்ட திசையில் மட்டும் அதன் வேகம் உக்கிரமாக இருக்கும் . இதில் பத்து சதவிகிதம் முன்கூட்டி தெரிந்தாலே போதும், புயல் பாதிப்பு குறித்த எச்சரிக்கை விடப்படும் .
எழுபதுகளில்தான் புயலுக்கு பெயர் வைக்க ஆரம்பித்தார்கள் . முதலில் உலக நாடுகள் முழுமைக்கும் என்றிருந்த விதி, பின்னர் ஆசிய நாடுகள் என்கிற அளவில் சுருங்கிப் போனது . இதனை ' என்விரான்மெண்டல் கவுன்ஸில் ஃபார் ஆசியா -- பசிபிக் ' என்கிற அமைப்புதான் கட்டுப்படுத்துகிறது .
இந்தியா, மியான்மர், தாய்லாந்து, வங்காள தேசம், மாலத்தீவு, பாகிஸ்தான், இலங்கை, ஓமன் உள்ளிட்ட எட்டு உறுப்பு நாடுகள் இதில் அடக்கம் . முதலில் புயலுக்குப் பெண் பெயர்தான் வைக்கப்பட்டது . அமெரிக்காவில் அதற்கு பலத்த எதிர்ப்பு . அதனால் பொதுவான பெயர் தேர்வு செய்யப்பட்டது .
புயலுக்கு கடந்த முறை மியான்மர் நாடு பெயர் வைத்தது . இந்த முறை வாய்ப்பு நமக்கு . இப்போது அடித்த ' தானே ' புயலுக்கு ' தேன் ' என்பதுதான் ஒரிஜினல் பெயர் . பெயர் பொருத்தம் சரியாக இருக்காது என்பதால் ' தானே ' என்று வைத்தோம் . "
--- ரமணன் , இயக்குனர் , சென்னை வானிலை ஆய்வு மையம் .
--- குமுதம் , 25 . 1 . 2012 .

No comments: