பணத்தை உள்ளே இழுக்காது . ஏடிஎம் இயந்திரத்தில் மாற்றம் .
ஏடிஎம் இயந்திரங்களில் கார்டை நுழைத்து, தேவையான பணத்தை குறிப்பிட்டவுடன், சில நொடிகளில் வாடிக்கையாளர் கேட்ட பணம் வெளியே வரும் . இயந்திரத்தில் வரும் பணத்தை, வாடிக்கையாளர்கள் உடனே எடுத்துக்கொள்ள வேண்டும் . குறிப்பிட்ட சில நொடிகள் வரை பணத்தை எடுக்காமல் இருந்தால், வெளியே தள்ளிய பணத்தை இயந்திரமே மீண்டும் உள்ளே இழுத்துக் கொள்ளும் . இத்தகைய இயந்திரத்தில் பணம் எடுக்க தாமதிக்கும் வாடிக்கையாளர்கள், பணம் எடுப்பதற்குள், இயந்திரத்துக்குள் போய் விட்டதாக புகார் கூறுகின்றனர் . மேலும், பணம் பெறவில்லை என்பதற்கான ரசீதை கேட்கின்றனர் . இதனால் இந்த ரிட்டிராக் ஷன் முறையை நீக்க வேண்டும் என்று பணம் செலுத்துவதற்கான இந்திய தேசிய கழகம், ஆர்பிஐயிடம் கோரிக்கை வைத்தது . இதை பரிசீலித்த ஆர்பிஐ விரைவில் இந்த முறையை நீக்க உள்ளது .
இது குறித்து, ஆர்பிஐ செயல் இயக்குனர் பத்மனாபன் கூறுகையில், " அனைத்து வாடிக்கையளர்களுக்கும் இதுபற்றிய முறையான அறிவிப்பு வெளியிடப்படும் . இனி, உங்கள் பணத்தை எடுக்க மறந்து, ஏடிஎம் மையத்தை விட்டு வெளியேறிவிட்டீர்கள் என்றால், அடுத்ததாக இயந்திரத்தை பயன்படுத்த வருபவர்களுக்கு அந்த பணம் கிடைத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் ." என்றார் .
--- தினமலர் , 14 . 1 . 2012 .
No comments:
Post a Comment