* வழிநெடுகிலும் வாகனங்கள்
பயணங்களில் கவனமாய் இருப்போம் !
* வார்த்தைகள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன
பேசுவதில் கவனமாய் இருப்போம் !
* சிந்தனையே செயலை முடிவு செய்கிறது
எண்ணங்களில் கவனமாய் இருப்போம் !
* எழுத்துகள் எப்போதும் ஆதாரம்
கையெழுத்தில் கவனமாய் இருப்போம் !
* சாதிக்க குணங்களே சந்தர்ப்பம் தருகின்றன
நடத்தையில் கவனமாய் இருப்போம் !
* வறுமையில் பணத்தின் அருமை தெரிகிறது
சேமிப்பில் கவனமாய் இருப்போம் !
* பிரிவில்தான் பாசத்தின் பெருமை தெரிகிறது
நேசத்தில் கவனமாய் இருப்போம் !
* கல்விதான் அறிவை தீர்மானிக்கிறது
படிப்பில் கவனமாய் இருப்போம் !
* முகம் தான் நினைப்பதை வெளியே காட்டுகிறது
அக அழகினில் கவனமாய் இருப்போம் !
* பொய்தான் நம்பகத்தன்மையை அடையாளப்படுத்துகிறது
உண்மையில் கவனமாய் இருப்போம் !
* வேலையின் விளைச்சலே பதவியை உயர்த்திடும்
உழைப்பத்தில் கவனமாய் இருப்போம் !
* தயக்கத்தில்தான் வெற்றிகள் தள்ளிப்போகிறது
தைரியத்தில் கவனமாய் இருப்போம் !
* வாழ்க்கை என்பது நிரந்தரமற்றது
மகிழ்ச்சியில் கவனமாய் இருப்போம் !
* 'எனது' என்பது நிரந்தரமற்றது
ஈகையில் கவனமாய் இருப்போம் !
* புகழ் ஒன்றே காலத்தால் அழியாதது
சாதனையில் கவனமாய் இருப்போம் !
-- என்.ஏகம்பவாணன், சென்னை. ( கவிதைச்சோலை ! ).
-- தினமலர். வாரமலர் சென்னை பதிப்பு. ஜூன் 15, 2014.

No comments:
Post a Comment