--சோழர் காலம் வரை தமிழகத்தில் தீபாவளி கொண்டாடப்படவில்லை .
--1944 , 1952 , 1990 , ஆகிய வருடங்களில் புரட்டாசியிலேயே ( 31-ம் தேதி ) தீபாவளி வந்தது .
--பட்டாசு என்ற சொல்லின் மூலம் ' டபாஸ் ' என்ற சமஸ்கிருத சொல்லாகும் .
--1946 -ம் வருடத்திலிருந்துதான் சிவகாசியில் கேப் வெடிகள் தயாரிக்கப்படுகின்றது .
--ஐரோப்பாவில் 18-ம் நூற்றாண்டு வரை பட்டாசு வெடிக்கும் உரிமை ராணுவத்தினருக்கு மட்டும்தான் இருந்தது .
-- தராசின் இரு தட்டுக்களும் சமநிலையில் இருபது போல ஐப்பசி மாதத்தில் மட்டும் இரவும் பகலும் சம அளவில்
இருப்பதால் , அந்த மாதத்திற்கு துலா ( தராசு ) மாதம் என்ற பெயரும் உண்டு .
-- சங்க காலம் முதல் பாரதி காலம் வரை தீபாவளி பற்றிய பாடல்கள் எதுவும் தமிழில் இல்லை .
-- மைசூர்பாகு என்ற சொற்றொடரில் வரும் ' மைசூர் ' என்பது பெர்சியன் மொழியில் ' மிஸ்ரி ' எனக் கற்கண்டைக்
குறிக்கும் சொல்லின் திரிபாகும் .
--தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்கள் நிறையப் பேர் வசிப்பதால் அங்கு தீபாவளி ஒரு தேசியப் பண்டிகையாகவே
அறிவிக்கப்பட்டுள்ளது .
-- சமண மதத்தின் புது வருடம் தொடங்குவது தீபாவளித் திருநாளில் தான் . மஹாவீரர் இந்த நாளில்தான் முக்தி
அடைந்தார் .
-- ஸ்கந்த புராணத்தின்படி பார்வதி தவம் செய்த நாள் தீபாவளியன்றுதான் . அதனால் , தன் உடலில் பாதி கொடுத்து
அர்த்தநாரீஸ்வரர் ஆனார் சிவன் .
-- குரு ஹர்கோவிந்த் சிங் , ஜஹாங்கிரின் சிறையிலிருந்து திரும்பி வந்தது தீபாவளித் திருநாளில் . அதனால் , புனிதமான
தாக இந்த தினத்தை நினைத்துக் கொண்டாடுவார்கள் .
-- நரகாசுரன் ஆண்ட நகரம் எங்கேயிருக்கிறது தெரியுமா ? ' பிராயாகி யோடிஷ்ஹபுர 'என்ற பெயருள்ள அந்த நகரம்
இன்றைய அஸ்ஸாம் தான் .
--குமுதம் சினேகிதி / அக்டோபர் . 1 , 2008 .
1 comment:
அன்பு நிலாபிரியன் அவர்களே ! வணக்கம் . என்னை Focus Lanka திரட்டியில் இணைந்து கொள்ளுங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளீர்கள் ! அதற்காக் நன்றி ! முதலில் என் திரட்டியே எனக்குப் புரியவில்லை ! அதை நன்கு தெரிந்து கொண்டு பிறகு உங்கள் திரட்டியில் இணையப் பார்க்கிறேன் .
Post a Comment