பாகற்காய் ஜூஸ் !
டாக்டர்கள் எச்சரிக்கை . பாகற்காய் ஜூஸ் உயிருக்கு ஆபத்து .
டயபடீஸ் நோயாளிகள் பலர் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைப்பதற்காக பாகற்காய் , சுரைக்காய் போன்றவற்றை அரைத்து ஜூஸ் செய்து குடிக்கின்றனர் . அதுபோல் டெல்லியை சேர்ந்த சுசில் குமார் சக்சேனா ( 59 ) குடித்து வந்தார் . அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் விஞ்ஞானி அவர் . சிலதினங்கள் முன் காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடித்த சிறிது நேரத்தில் வயிறு பாதிக்கப்பட்டு பலியானார் . அதே ஜூஸ் குடித்த அவரது மனைவி வயிறு புண்ணாகி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுகிறார் . இதையடுத்து , மூலிகை காய்கறி பானங்களை சொந்தமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர் . " வெள்ளரி இனத்தை சேர்ந்த சுரைக்காய் , பாகற்காய் , புடலை போன்றவற்றில் நஞ்சு பகுதி உள்ளது . அதை அகற்றாமல் பயன்படுத்தக்கூடாது . பச்சையாக இந்த காய்கறிகளை ஜூஸ் போட்டு குடிப்பது உயிருக்கே ஆபத்து " என்று டாக்டர் சேத் எச்சரித்தார் .
ஜூஸ் மட்டுமின்றி சமைப்பதற்கு முன்பும் இதுபோன்ற காய்களின் நடுவில் உள்ள நஞ்சு பகுதியை அகற்ற வேண்டியது அவசியம் . கசப்பு தன்மைக்காக அவற்றை டயபாடீஸ் நோயாளிகள் பயன்படுத்துவது உடல்நலனை பாதிக்கும் என்றார் அவர் .
--- தினகரன் , 13 ஜூலை . 2010.
No comments:
Post a Comment