Monday, January 24, 2011

ஆறாவது அறிவு !

ஆறாவது அறிவுக்கு காரணம் சமைத்த உணவுகள்தான் , ஆராய்ச்சியில் தகவல் .
விலங்குகளுக்கு ஐந்தறிவு , மனிதனுக்கு ஆறு அறிவு என கூறுவதுண்டு . இது உண்மையோ பொய்யோ , உணவை சமைத்து சாப்பிடுவதால் , விலங்குகளைவிட மனித மூளை சிறந்து விளங்குவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர் .
ஆரம்பத்தில் பச்சை காய்கறிகளை அப்படியே சாப்பிட்டு வந்த மனிதர்கள் , படிப்படியாக சமைத்து சாப்பிட ஆரம்பித்தனர் . 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே சமைத்து சாப்பிட தொடங்கிவிட்டதாக வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன . இதனாலேயே விலங்கிலிருந்து மனித மூளை தனித்தன்மை பெற்று விளங்குகின்றன .
அமெரிக்காவின் ரோடு தீவில் உள்ள ஹார்வர்டு அன்ட் பிரவுன் யுனிவர்சிட்டியின் கிறிஸ்டோபர் ஆர்கன் , ஹார்வர்டு யுனிவர்சிட்டியின் சார்லஸ் நன் மற்றும் ரிச்சர்டு ரங்கம் ஆகியோர் மனித மூளை செயல்பாடு குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர் .
பல்வேறு விலங்குகளின் உணவு பழக்கவழக்கங்கள் குறித்த தகவல்களை திரட்டினர் . அதை மனிதனின் உணவு பழக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தனர் . விலங்குகள் பச்சையாக உணவை உட்கொள்வதால் அதை நன்றாக மென்று சாப்பிட வேண்டி உள்ளது . அதற்காக விழித்திருக்கும் நேரத்தில் 48 சதவீதத்தை செலவிடுகின்றன . இதனால் அதிக ஆற்றல் செலவாவதால் மற்ற விஷயங்களில் கவனம் குறைகிறது .
ஆனால் மனிதர்கள் உணவை சமைத்து சாப்பிடுகின்றனர் . உணவை சமைக்கும்போது , அதன் செல் சுவர்கள் உடைந்து விடுகின்றன . இதனால் உணவை மெல்வதும் , ஜீரணம் ஆவதும் எளிதாகிறது . உணவை மெல்வதற்கு 10 சத்வீத நேரம் மட்டுமே செலவாகிறது . இதனால் உணவை மெல்லுவதற்கான ஆற்றல் மற்றும் நேரம் குறைந்து மற்ற விஷயங்கள் குறித்து யோசிக்க முடிகிறது . சமூக உறவுகளை வளர்க்கமுடிகிறது . விலங்குகளிலிருந்து மனித மூளை தனித்தன்மை பெற்று விளங்குவதற்கு இதுவே முக்கிய காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் .
--- தினகரன் , 19 ஜூலை . 2010.

No comments: