பெற்றோருக்கு தண்டனை !
குழந்தைகளை அடித்தால் பெற்றோருக்கு தண்டனை .
சட்ட மசோதா தயாராகிறது .
குழந்தைகளை அடிக்கும் பெற்றோரை தண்டிக்க அமெரிக்காவில் சட்டம் உள்ளது . அதுபோன்ற சட்டத்தை இந்தியாவிலும் கொண்டுவர அரசு பரிசீலனை செய்து வருகிறது . பெற்றோர் மற்றும் ஆசிரியர்களால் அடிக்கப்படும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர் . இதைத் தடுக்க குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய கமிஷன் ( என். சி. பி. சி. ஆர் ). சில விதிமுறைகளை வகுத்துள்ளது . மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கடந்த ஆண்டு உருவாக்கிய குழ்ந்தைகளுக்கு எதிரான தாக்குதல் தடுப்பு மசோதாவும் அமைச்சரவையில் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளது .
இச்சட்டத்தின் மூலம் குழந்தைகளை அடிக்கும் பெற்றோர் , ஆசிரியர் , உறவினர் மற்றும் நண்பர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் . குழந்தைகளை முதல் தடவை அடித்தால் ஓர் ஆண்டு சிறை அல்லது ரூ. 5,000 அபராதம் , இரண்டாவது முறையாக அடித்தால் 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது .
குழ்ந்தைகளை பிச்சை எடுக்க விடுபவர்கள் , வேலைக்கு வைத்திருப்பவர்கள் , கடத்துபவர்கள் மீதும் இந்த சட்டம் பாயும் .
--- தினகரன், 17 ஜூலை . 2010.
No comments:
Post a Comment