ஒரு எண் 11 ஆல் வகுபடுமா என்பதைக் கண்டுபிடிக்க ஒரு ஈஸி டெக்னிக் இருக்கிறது .
2 இலக்க எண்கள் : இவை 11 - ஆல் வகுபடுமா என்பதைப் பார்த்ததுமே சொல்லிவிடலாம் . இரண்டு இலக்கங்களும் ஒன்றாகவே ( 11, 22, 99 ) இருக்கும் !
3 இலக்க எண்கள் : இந்த எண்களில் முதல் எண்ணையும் 3 வது எண்ணையும் கூட்டி, அதிலிருந்து மத்தியில் உள்ள எண்ணைக் கழிக்க வேண்டும் . விடை 0 அல்லது 11 வந்தால், அந்த எண் 11 ஆல் வகுபடும் !
உதாரணம் : அ ) 198 ... ( 1 + 8 ) கழித்தல் 9 . = 0;
ஆ 759 ... ( 7 + 9 ) கழித்தல் 5 ; = 11. எனவே இந்த இரு எண்களும் 11 ஆல் வகுபடும் .
அதிக இலக்க எண்கள் : இந்த எண்களிலும் மேற்குறித்த வகையிலேயே ஒரு எண்ணை விட்டு ஒரு எண் என்ற வரிசையில் கூட்டி, கூட்டுத்தொகை வித்தியாசம் 0 அல்லது 11 வருகிறதா என்று பார்த்தால் போதும் !
உதாரணம் : .அ ) 2574... ( 2 + 7 ) ; கழித்தல் ( 5 + 4 ) = 0 ;
ஆ ) 58432... ( 5 + 4 + 2 ) ; கழித்தல் ( 8 + 3 ) = 0 .எனவே, இவை 11 ஆல் வகுபடும் !
--- தினமலர் ,டிசம்பர் 24 ,. 2011 .
No comments:
Post a Comment