* கத்தரிக்காயைச் சுட்டு... பச்சடி, கொத்சு, துவையல், கூட்டு போன்றவற்றைச் செய்வதற்கு எளிமையான வழி... கத்தரிக்காயின் மீது நல்லெண்ணெயை தடவி, காம்புடன் ஒரு தட்டில் வைத்து, குக்கரில் சாதம் வைக்கும்போது வைத்து விடுங்கள் . இதனால், கத்தரிக்காயின் தோலைச் சுலபமாக நீக்கலாம் . காய் பாகத்தைக் கையால் பிசைந்தால் கூழாகிவிடும் .விரும்பிய பதார்தத்தை விரைவில் தயாரிக்கலாம் .
* ரெடிமேட் ' த்ரீ இன் ஒன் ' மாவு தயாரிக்க ஒரு ஐடியா . கடலை மாவு, அரிசி மாவு, மைதா மாவு இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, தேவையான காரப்பொடி, உப்பு, பெருங்காயம், டால்டா சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றுங்கள் . இந்த மாவை ஒரு டப்பாவில் போட்டு ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள் . தேவையானபோது எடுத்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து, பஜ்ஜி, பக்கோடா, முறுக்கு என வெரைட்டியான டிபன் நொடியில் தயாரித்துவிடலாம் .
* சுருட்டி வைத்திருக்கும் சார்ட் பேப்பர், காலண்டர், டாக்குமென்ட் இவற்றை நேராக்குவதற்காக, எதிர்பக்கமாக சுருட்டுவது வழக்கம் . இதனால், பேப்பரின் ஆரம்பம் கசங்கி விடுவது வாடிக்கையாக நடக்கும் . சப்பாத்திக் குழவி, பி.வி.சி. பைப், பாட்டில் பொன்ற உருளையான பொருட்களில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டு அதை ஒட்டினார்போல் பிடித்துக் கொண்டு சுருட்டிவிட்டு, பிறகு விரித்தால் பேப்பர் கசங்காமல் நேராகி விடும் .
--- அவள் விகடன் . 8 . 4 . 2011 . இதழ் உதவி : N. கிரி , நியூஸ் ஏஜென்ட் திருநள்ளாறு ( கொல்லுமாங்குடி ).
No comments:
Post a Comment