* பெரும்பாலான பறவைகள், அதிகபட்சமாக 914 மீட்டர் உயரம் வரைதான் பறக்கும் . விதிவிலக்காக இமயமலைப் பகுதியில் உள்ள சில பறவை இனங்கள் 8000 மீட்டர் உயரம் வரை பறப்பதுண்டு .
* ஒரு ஆண்டின் 12 மாதங்களை ஒரு பருவத்துக்கு 2 மாதங்கள் என்று பிரித்துள்ளனர் . அவை : கார்காலம், முன்பனிக்காலம், கூதிர்காலம், பின்பனிக்காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம் ஆகியவை .
* முன்பனிக் காலம் என்ற பருவம் மார்கழி மற்றும் தை மாதங்கள் அதாவது டிசம்பர், ஜனவரி மாதங்களைக் குறிக்கும் . கூதிர் காலம் என்ற பருவம் ஐப்பசி, கார்த்திகை ( அக்டோபர், நவம்பர் ) மாதங்கள் . பின்பனிக் காலம் என்றால் மாசி, பங்குனி ( பிப்ரவரி, மார்ச் ) மாதங்கள் . இளவேனில் காலம் என்பது சித்திரை, வைகாசி ( ஏப்ரல், மே ) மாதங்கள் . முதுவேனில் காலம் என்பது ஆனி, ஆடி மாதங்கள் . ஆதாவது ஜூன், ஜூலை மாதங்கள் . கார்காலம் என்பது ஆவணி, புரட்டாசி ( ஆகஸ்ட், செப்டம்பர் ) மாதங்கள் .
* பழங்காலத் தமிழர்கள் ஒரு நாள் பொழுதை வைகறை ( இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை ), காலை ( காலை 6 மணி முதல் 10 மணி வரை ) , நண்பகல் ( பகல் 10 மணி முதல் 2 மணி வரை ), ஏற்பாடு ( மதியம் 2 மணி முதல் 6 மணி வரை ), மாலை ( 6 மணி முதல் 10 மணி வரை ) , யாமம் ( இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ) என்று ஆறு பொழுதுகளாகப் பிரித்து வைத்து கூறிவந்தனர் .
--- தினமலர் இணைப்பு 8 ஏப்ரல் 2011 .
No comments:
Post a Comment