* தக்காளியை சிறு சிறு துண்டங்களாக நறுக்கி, ரசத்தில் சேர்த்தால், வீணாக்கிவிடுவர் . தக்காளியை மிக்ஸியில் அரைத்து, புளி ஜலத்துடன் சேர்த்து கொதிக்க வைத்து ரசம் வைக்கவும் . சுவையும், மணமும் சூப்பராக இருக்கும் . புளியின் தேவையும் குறையும் .
* இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்து, வெங்காயத்துடன் வதக்கி ரவா உப்புமா செய்தால் வாசனையாக இருப்பதுடன் மிளகாயும் வாயில் கடிபடாது .
* வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுபவர்கள், தண்ணீரை அடுப்பில் வைத்துக் கொதிக்க விட்டு, சிறிது படிகாரத்தைப் போட்டு காய்ச்சி இறக்கவும் . ஆறியதும் அந்நீரில் வாய் கொப்பளித்து வர, வாய் துர்நாற்றம் நீங்கும் . தினமும் மூன்று முறை இப்படிச் செய்யலாம் .
* மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி குறைய, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை, 100 மில்லி மோருடன் கலந்து குடிக்கவும் . வயிற்று வலி குறையும் .
* கறுப்பானவர்கள் கண்ட கண்ட கிரீம்களைத் தடவி அலர்ஜி வரவழைத்துக் கொள்வதைவிட, இயற்கை வழியை மேற்கொண்டு பொலிவு பெறலாம் . ஆவாரம் பூவை உலர்த்திச் சருக்காக்கி அதைத் தூள் செய்து, அத்துடன் அரைப் பங்கு கடலை மாவை கலந்து, காற்றுப்புகா டப்பாவில் அடைத்துவைத்துக் கொள்ளவேண்டும் . தினமும் காலையில் இந்தப் பொடியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் குழைத்து முகம், கழுத்து, கை, கால்களில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்துக் குளித்தால் சில நாட்களில் அனைவரும் " எப்படி இவ்வளவு சிவப்பானாய் ? " என்று கேட்பது உறுதி .
* நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கு, வெயில் காலத்தில், குளிக்கும் போது, பக்கெட் தண்ணீரில் 4 சொட்டு யுடிகொலன் விட்டு குளிக்கவும் . வியர்வை துர்நாற்றம் வீசாது .
* கை விரல்களை சங்கு மாதிரி வைத்துக்கொண்டு ( சிரிது உயர்த்தி ) 10 நிமிடம் மூச்சை இழுத்து விடுவோமேயானால் உடம்பின் எல்லா பாகங்களும் சுவாசம் பெறும் .
* ஒரு கரண்டி இட்லி மாவில், கைப்பிடி ஜவ்வரிசியை கலந்து வைத்து விட்டால், சிறிது நேரத்தில் மாவு கெட்டியாகிவிடும் . பிறகு, பொடியாக அரிந்த வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி கலந்து போண்டாவாக உருட்டிப் போடலாம் . புதுவித ருசியுடன் இருக்கும் .
* காலை வேளையில் குழம்பு, ரசம் வைக்க புளி ஊற வைத்துக் கரைக்கச் சிரமப்படுகிறீர்களா ? தேவையான அளவு புளியை ஒரு தம்ளர் தண்ணீர்விட்டு ஒரு மூடி போட்ட பாத்திரத்தில் ஃப்ரிஜ்ஜில் முன் இரவே வைத்து விடுங்கள் . காலையில் அந்தப் பாத்திரத்தில் புளிக்குப் பதில் புளி பஞ்சுதான் இருக்கும் .
* பல் தேக்கும் பேஸ்ட் காலியாகும் நிலை வந்துவிட்டால் டியூப்பை அழுத்திக் கஷ்டப்பட வேண்டாம் . டியூப்பின் நடுவில் கத்தரியால் இரண்டாக கட் பண்ணினால் போதும் . மிச்சம் இருக்கும் பேஸ்ட் எளிதாக வெளியே வந்து விடும் .
--- மங்கையர் மலர் . ஏப்ரல் 2011 .
--- இதழ் உதவி : N .கிரி நியூஸ் ஏஜென்ட் திருநள்ளாறு . ( கொல்லுமாங்குடி ) .
No comments:
Post a Comment