* பஞ்சாங்கம் படிப்பதற்கு பஞ்சாங்க படலம் என்று பெயர் . கேட்பதற்குப் பஞ்சாங்க சிரவணம் என்று பெயர் .
* திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கர்ணங்கள் என்பவை பஞ்சாங்கம் எனப்படுகிறது . .
* பஞ்சாங்கத்தில் அவ்மாகம் என்றும், திரிதினஸ்பிர்க் என்றும் இருப்பதைப் பார்த்திருக்கலாம் . ஒரு நாளில் மூன்று நட்சத்திரங்களும் சேர்ந்திருந்தால், அந்த நாளை அவமாகம் என்பர் ஒரு திதி அல்லது நட்சத்திரம் அல்லது யோகம் மூன்று நாட்களில் கலந்திருந்தால் அந்த நாளை திரிதினஸ்பிர்க் என்பர் . இத்தகைய நாட்களில் சுபகாரியங்களைச் செய்யக் கூடாது .
* பஞ்சாங்கத்தின் ஐந்து உறுப்புக்களில் கரணம் ஒன்று . ஒரு நாளில் இரண்டு கரணங்கள் இடம்பெறும் . கரணங்கள் 11 . அவற்றுள் சர கரணங்கள் 7 . அவை : பவம், பாலவம், கெவுலவம், தைதுலம், சுரஜை, வனிஜை, பத்ரம் என்பார்கள் . சகுனி, சதுஷ்பாதம், நாகவம், கிம்ஸ்துக்னம் என்ற நான்கும் ஸ்திர கரணங்கள் ஆகும் .
* பூமியைச் சுற்றியுள்ள அண்டப் பெருவெளி ஒரு வட்டமாகக் கருதப்படுகிறது . அந்த வட்டத்துக்கு 360 டிகிரிகள் . அவை 12 ராசிகளாக பிரிக்கப்படுகின்றன .ஒரு ராசிக்கு 30 டிகிரிகள் சூரியன் ஒரு ராசியில் தங்கியிருக்கும் காலம் ஒரு மாதம் என்று சொல்லப்படுகிறது .
* சூரியன் ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு ஒரு மாதம் . அந்த நேரத்தில் சந்திரனோ 12 ராசிகளையும் ஒருமுரை கடந்து வந்து விடுகிறது .
* ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு . சந்திரன் சஞ்சரிக்கும் பாதையில் சந்திரனுக்கு முன்னால் உள்ள தூரம் ( அதாவது 6.6 டிகிரிகள் ) நட்சத்திரத்த்தின் முதல் இரண்டு பாதங்கள் . பின்னால் இருப்பது அந்த நட்சத்திரததிற்குரிய பின் இரு பாதங்கள் .
* ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் நான்கு பாதங்கள் உண்டு . ( ஒரு பாதம் என்பது 3.3 டிகிரி . ஒரு நட்சத்திரம் 13.2 டிகிரி ) .
--- தினமலர் இணைப்பு , ஏப்ரல் 7 . 2011 .
No comments:
Post a Comment