லண்டனில் அமெரிக்க பெற்றோருக்கு பிறந்தவர் எலியபெத் டெய்லர் . இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா சென்று, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவருடைய குடும்பம் குடியேறியது . 9 வயதில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் எலிசபெத் நடிக்கத் தொடங்கினார் . பின்னர், படத்துக்கு 10 லட்சம் டாலர் சம்பளம் பெறும் நடிகையாக உயர்ந்தார் .
1963 ம் ஆண்டு வெளிவந்த ' கிளியோபாட்ரா ' படத்தில் ரிச்சர்ட் பர்ட்டனுடன் நடிக்க எலிசபெத் டெய்லர் வாங்கிய சம்பளம் 40 லட்சம் டாலர் ஆகும் . அதன் இப்போதைய மதிப்பு 4.7 கோடி டாலர் ஆகும் .
லாஸ் எஞ்சல்ஸ் நகரில் எலிசபெத்துக்கு பண்ணை வீடு உட்பட 15 கோடி டாலர் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது . சினிமாவில் நடித்து கிடைத்த புகழைவிட, பலமுறை திருமணம், விவாகரத்து செய்து கொண்டதால் எலிசபெத் பிரபலமானார் .
மொத்தம் 8 முரை விவாகரத்து செய்தவர் அவர் . ஆனால், அவருடைய முன்னாள் கணவர்கள் 7 பேர் மட்டுமே . ஏனெனில், ரிச்சர்ட் பர்ட்டனை 2 முரை திருமணம் செய்து, விவாகரத்து செய்துவிட்டார் .
இதய கோளாறு காரணமாக, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் சிடார்ஸ் -- சினாய் மருத்துவ மையத்தில் 79 வயது எலிசபெத் கடந்த பிப்ரவரி மாதம் 12 ம் தேதி சேர்க்கப்பட்டார் . அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது . எனினும் அதே மருத்துவமனையில் எலிசபெத் டெய்லர் கடந்த மாதம் 23 ம் தேதி அதிகாலை மரணமடைந்தார் .
மறைந்த எலிசபெத் டெய்லரின் நகைகள் மற்றும் சொத்துகள் மதிப்பு 100 கோடி டாலர் ( ரூ. 4,500 கோடி என இப்போது மதிப்பிடப்பட்டுள்ளது . சுயமாக சம்பாதித்து கோடீஸ்வரியான 14 பெண்களின் பட்டியலில் எலிசபெத் டெய்லர் இடம் பெறுகிறார் என்று ' தி இண்டிபென்டென்ட் ' பத்திரிகை கூறுகிறது .
--- தினமலர் ,ஏப்ரல் 1 , 2011
No comments:
Post a Comment