இந்து சமய குறியீடுகள் கண்டுபிடிப்பு !
வட அமெரிக்கா அரிசோனா மாநிலத்தில் பலாட்க்கி என்ற சிகப்பு நிறமுடைய மலைப்பகுதியில் ஜாக் அண்ட்ரூஸ் என்பவராலும், மற்றொரு குறியீடு தென்னாப்பிரிக்கா பூம்பலாசில் உள்ள சுபாஸ் சந்திரபோஸ் சதுக்கத்தில் ரோப் மில்லன் என்பவராலும் இந்த ஓம் குறியீடுகள் கண்டறியப்பட்டுள்ளன .
அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓம் குறியீடு மாறுபட்ட வடிவில், அதாவது 90 டிகிரி திரும்பியது போல் கருஞ்சிவப்பு நிறத்தில் வரையப்பட்டுள்ளது . தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓம் குறியீடு பாறை மீது பொறிக்கப்பட்டுள்ளது . அதில் தசமகா வித்யாக்களின் பத்து பெண் தெய்வங்களில் ஒன்றான ஸ்ரீதாராவின் இருபத்தோரு அம்சங்களை குறிப்பிடும் இருபத்தோரு கோடுகள், ஒளி ரேகைகள் போலும், ஸ்தூல, சூட்சும, காரண நிலைகளை குறிப்பிடும் மூன்று வட்டங்களும், அடுத்து பிரபஞ்ச குறியீடும், அதற்கு நடுவே இமயமலையில் உள்ள ஓம் பர்வதம் எனும் மலையில் காணப்படும் ஓம் - வடிவம் போன்றும், அதனைச் சுற்றிலும் ஒளி ரேகைகளுடன் தீர்க்க பிரணவ மந்திரமாகிய ஓம் குறியீடும் காணப்படுகின்றது . இந்த குறியீட்டில் காணப்படும் பிரபஞ்ச குறியீட்டின் வடிவத்தை தமிழகத்தின் பெரும்பான்மையான கோயில்களில் காணலாம் . இதேபோல் குறியீடு நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் உள்ள பெருமாள் கோயில் மகாமண்டபத்தின் வடபுற வாயில் படிக்கட்டில் பொறிக்கப்பட்டுள்ளது .
இந்தியாவின் ஆன்மிகத் தத்துவங்களும், தீர்க்க பிரணவ மந்திரமான ஓம் குறியீடும் பல்வேறு நாடுகளை சென்றடைந்துள்ளது என்பதற்கு இந்த 2 குறியீடுகள் மிகச்சிறந்த சான்றுகளாகும் .
--- தினமலர் ,18 . 3. 2011 .
No comments:
Post a Comment