Saturday, August 30, 2008

!சீதையின் தந்தை பெயர் !

சீதையின் தந்தை பெயர் 'ஜனகர்' என்றுதான் நாம் எல்லோரும் அறிவோம்.. ஆனால்,' ஜனகர்' என்பது நேரு, படேல் என்பது போல் குடும்ப்ப் பெயர்.ஜனகர் என்றால் அப்பா, ஜனனி என்றால் தாயார்.
ஜனகருடைய முழுப் பெயர் 'சீரத்வஜ ஜனகர்'. 'சீர' என்றால் மரவுரி. 'த்வஜம்' என்றால் கொடி. மரவுரியைக் கொடியாகக் கொண்டவர். சீதையின் தாயார் பெயர் 'சுநயனி'.
வால்மிகியும் , கம்பரும் கூறாத இந்தப் பெயர்கள் பாகவதத்தில் பரிஷீத் மகாராஜனுக்கு சுகர் கூறிய இராமாயணத்தில் வருகிறது.
--வாரியார் சுவாமிகள்.

Friday, August 29, 2008

கண்ணகி !

சிலப்பதிகார கதையை இசுலாமியக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர், ஜ்னாப். அப்துல் ரஹ்மான் அவர்கள் அழகாக , இரண்டு வரியில் கூறுகின்றார்:
"பால் நகையாள், வெண்முத்துப் பல் நகையாள், கண்ணகியாள் கால் நகையால் வாய் நகைபோய்க், கழுத்து நகை இழந்த கதை ".
விளக்கம்:பால் நகையாள்--பால் உணர்ச்சி தோன்றுகிற மாதிரி சிரிக்கமாட்டாள்;
வெண்முத்துப் பல் நகையாள்--முத்துப் போன்ற பற்களை உடையவள்,
கால் நகையாள்-- கால் சிலம்பினால்;
வாய் நகை போய்-- புன் சிரிப்பு மறைந்து;
கழுத்து நகை-- தாலி.

Thursday, August 28, 2008

ஆடவன் பருவம் அடைவது எப்போது ?

பெண்களுக்குப் பருவம் வந்து விட்டது ஒரு குறிப்பிட்ட நாளில் உணரப்படுகிறது. ஆண்களுக்கு அப்படி இல்லையே ! ஆடவன் பருவமடைந்ததை எப்படி தீர்மானிப்பது !
மாமரம் பருவமடைந்து விட்டதை அதன் புஷ்பங்கள் காட்டுகின்றன. ஆனால், பலா மரம் பருவமதைந்து விட்டதை எது காட்டுகிறது?
ஆடவன் பருவம் அடைந்து விட்டதை அவனது கண்களே வெளிப்படுத்துகின்றன. பலா மரத்தில் காய்கள் வெளிப்படுத்துவது போல்.
--கண்ணதாசன். தினமலர் தீபாவளி மலர்.1994.

Wednesday, August 27, 2008

இராமர் !

"ஒரே சொல், ஒரே இல், ஒரே வில் !" என்று பெயர் பெற்றவன் இராமன்.
இரமர் வனவாசத்தின் போது தங்கியிருந்த இடம் 'பஞ்சவடி'. கோதாவரியின் கிழக்குக் கரையில் 5 ஆலமரங்கள் அமைந்த இடம். 'நவசிக' என்பதன் திரிபு 'நாசிக்'. 9 மலைகளின் உச்சியில் இருப்பதால் 'நவசிக ' எனப்பட்டது. சூர்பனகையின் மூக்கை லட்சுமணன் வெட்டிய இடமும் இதுதான்.

புலவன் !

பரிசு கேட்டு வந்த ஒரு புலவனிடம் அரசன், இராமாயணத்தையும், மகா பாரதத்தையும் ஒவ்வொரு வரியில் சொல்லும் ! என்றான். புலவன் சொன்னது:
"பெண்ணால் கெட்டது இராமாயணம். ! மண்ணால் கெட்டது மகா பாரதம் !"

Tuesday, August 26, 2008

தாமரை !

தடாகத்தில் பூத்திருக்கும் தாமரையின் நிறமும், வாசமும் அதனுள் இருக்கும் அரிய தேன் பற்றிய விஷயங்களும் அங்கேயே -- அந்த தடாகத்திலேயே வசிக்கும் மண்டூகத்திற்குத் (தவளை ) தெரியாது. என்கிருந்தோ வரும் வண்டுகளுக்குத் தெரிந்து, புரிந்து அனுபவித்துச் செல்லும். !
--முப்பயிற்றங்குடி. திரு. சேதுராமப் பிள்ளை. கூறக்கேட்டது. (14-02-1997 ).

உண்மை

உண்மையை யாரும் நம்புவது இல்லை. பசும் பாலிலிருந்து தயாரித்த மோரைத் தெருத் தெருவாக , அலைந்து, திரிந்து வி
விற்க வேண்டியுள்ளது. ஆனால் கள் உட்கார்ந்த இடத்திலேயே விற்றுப் போகிறது.
நல்லது மெதுவாகத்தான் விலை போகும்.விரைவில் விற்பதால் கெட்டது ஒரு போதும் நல்லது ஆகிவிட முடியாது. !

Monday, August 25, 2008

கோழியா? முட்டையா?

கோழியிலிருந்து முட்டை வந்ததா? முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்று மில்லியன் டாலர் கேள்விக்கு ஒரு வெட்னரி டாக்டர் சொன்னது:
'கோழியிலிருந்து தான் முட்டை வந்தது. இப்போதும் வருகிறது. முட்டையிலிருந்து கோழி வராது......குஞ்சுதான் வரும்.குஞ்சு கோழியாகவும் இருக்கலாம், சேவலாகவும் இருக்கலாம்."

Sunday, August 24, 2008

இடம் .......

"நம்பிக்கை உள்ள இடம் அன்பு ஊறும்,
அன்பு ஊறும் இடம் சாந்தம் பொங்கும்,
சாந்தம் பொங்கும் இடம் இன்பம் பெருகும்,
இன்பம் பெருகும் இடம் ஞானம் வழியும்,
ஞானம் வழியும் இடம் அருள் ஒளிரும்,
அருள் ஒளிரும் இடம் கடவுள் தோன்றும்,
கடவுள் தோன்றும் இடம் வேன்டுவது ஒன்றும் இல்லை ! "
--பழியஞ்சியநல்லூர். திரு .N.இராமகிருஷ்ண வைத்தியர். 'ஸ்ரீ சண்முகாநந்தா சித்த வை'த்திய சாலை'இல்லத்தில்.

Saturday, August 23, 2008

தேசிய கீதம் !

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் 1950 ல் கூடிய அரசியல் நிர்ணய சபையில் நம் நாட்டின் தேசிய கீதமாக தேர்ந்தெடுக்க மூன்று கவிதைகள் ஆராயப்பட்டன.
அமரகவி சர் முஹம்மது எழுதிய "சாரே ஜஹான்சே அச்சா"
மகாகவி ரவீந்திர த் தாகூர் எழுதிய "ஜன் கன மன அதி நாயக"
பக்கிம் சந்தர் சட்டர்ஜி எழுதிய " வந்தே மாதரம்". ஆகியவைதான் அவை.
'சாரே ஜஹான்சே' வின் சொற்கள் இசைக்கு உகந்ததாக இல்லை என கைவிடப் பட்டது. அடுத்து 'வந்தே மாதரம்' கவிதையில் 'தாயே உன்னை வணங்குகிறேன்' என்று ஒரு வரி வருகிறது. இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்காத இந்த வரி முரண்பட்டது. இறுதியில் தாகூரின் "ஜன கன மன" ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
--தினமலர் வாரமலர். (17-08-1997).

Friday, August 22, 2008

வாழ்க்கை தடைகளும், ஆறுகளும் !

வாழ்க்கையில் தடைகள் வருவது சகஜம். அப்போது நாம் ஆறு போல செயல் பட வேண்டும். அதாவது சிறு கற்களை ஆறு அடித்துக் கொண்டு சென்று விடுகிறது.. (சிறு தடைகளை பொருட்படுத்தவே கூடாது.). சற்று பெரிய பாறைகளை ஆறு தாண்டிச் சென்றுவிடுகிறது. ( சற்று பெரிய தடைகளை முயன்று தாண்டிச் சென்றுவிட வேண்டும்). குன்று அல்லது மலை எதிர் பட்டால் ஆறு பிரிந்து சுற்றிச் சென்று விடுகிறது. (பெரிய தடைகளை விட்டு விலகி வேறு வழியாக நம் இலக்கை அடைய வேன்டும்.
--மங்கையர் மலர் . ஏப்ரல் 1997 ).

Thursday, August 21, 2008

" A I D S "

" சுய முயற்சியில் பெற்றுள்ள தடைக்காப்புறுதிக் குறைபாடுடைய நோய்க்குறி ஒத்திசைவு" - ( ACQVIRED IMMUNO DEFICIENCY SYNDROME ) என்பதன் தமிழாக்கம்.

உங்கள் வயதை சரிபார்க்க....

உங்கள் முகவரியின் நம்பரை (வீட்டு எண் ) எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டால் பெருக்கவும். ஐந்தைக் கூட்டுங்கள். அதை 50 ஆல் பெருக்கவும் .அதனுடன் உங்கள் வயதைக் கூட்டவும் .ஒரு வருடத்தின் மொத்த நாட்களான் 365 ஐ அந்த எண்ணுடன் கூட்டுங்கள். வரும் தொகையிலிருந்து 615 ஐக் கழிக்கவும்.
தற்போதைய விடையின் இறுதி இரு எண்கள் உங்கள்வ் வயதைக் குறிக்கும். மற்ற எண்கள் உங்கள் வீட்டு எண்ணைச் சொல்லும்.
-நன்றி:- இதயம் பேசுகிறது. ( 03-11-1991 ).

இராமாயணக் கணக்கு !

எண்ணஞ்சு கால்சிரனை எண்பதுகா ணிச்சிரன்
எண்னிமனம் கொல்கவென்று கூறியதேன்?-
ஒண்ணுதலாய் ,
ஆன'ச' நான் கு அரிய ' த' ஒன்பது
தானெடுத்துப் போனதனால் தான் !
-சதாவதானி செய்குதம்பி பாவலர்.
பொருள்:-
எண்ணஞ்சு---நாற்பது
எண்ணஞ்சு கால் சிரனை--- பத்து தலை இராவணன்.
எண்பது காணி---ஒன்னு.
எண்பது காணி சிரசன்--- ஒரு தலை இராமன்.
ஏன் கொல்ல எண்ணினான் ?
ஆன'ச' நாலு---'ச' வரிசையில் நாங்காவது எழுத்து ' சீ'
அரிய'த' என்பது --- 'த' வரிசை 9 வது எழுத்து 'தை'
சீதையை எடுத்துச் சென்றது தான்.
-தினமணி சுடர் ( 11-07-1992 ).

Wednesday, August 20, 2008

மூக்கு !

மூக்கின் நுனியில் உள்ளே போய் வெளியே வருகின்ற சுவாசத்தை உற்றுப் பார்க்க வேண்டும்.
மூக்கு நுனியிலுள்ள சுவாசத்தை கூர்மையாகக் கவனிக்கும் போது கோபம் விலகுவது மட்டுமல்ல; புத்தி கூர்மையாவதும் , மனம் அமைதியாவதும் ஒருங்கே நடைபெறுகின்றன. எனவே எதிரே இருக்கும் பிரச்னையை அணுகுவது என்பது எளிதாக முடிகிறது..
-பாலகுமாரன் பதில்கள். குமுதம் 05-03-2008.

Tuesday, August 19, 2008

செய்தித் துளிகள் !

-சிவகாசிக்கு குட்டி ஜ்ப்பான் எனப் பெயரிட்டவர் ஜவஹர்லால் நேரு.
-கம்பராமாயணம் அரங்கேற்றப்பட்ட இடம் ஸ்ரீரங்கம்.
- டால்பின் ஒரு கண்ணைத் திறந்தபடியேதான் தூங்கும்.
- மல்யுத்தப் போட்டி நடைபெறும் நேரம் 12 நிமிடம்.
- பாட்டில் என்பது ஆங்கிலமல்ல , கிரேக்க வார்த்தை.
- இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினசரி மோரில் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாப்பிட தீரும்.
-நன்றி:- தினமலர் வார மலர். (20-01-2008).

Monday, August 18, 2008

பிணி - நோய் !

வியாதியைக் குறிக்க தமிழில் இரண்டு சொற்கள் உண்டு. ஒன்று நோய், மற்றொன்று பிணி.
வரப்போகிறேன் என்பதை முன்னறிவிப்பு செய்துவிட்டு வரும் வியாதியை பிணி என்று சொல்வார்கள். இது அறிவிப்பு கொடுத்து வரும். வந்து விட்டாலோ நீங்கவே நீங்காது. தொழுநோய்,காசநோய்,யானைக்கால் புற்றுநோய் போன்றவறை பிணிகள் என்று சொல்லவேண்டும்.
முன்னறிவிப்பின்றி வரும் , மருத்துவ சிகிச்சை செய்துகொண்டால் நீங்கும். அத்னை நோய் என்று சொல்வார்கள். காய்ச்சல் போன்றவை நோய்கள்.
-நன்றி:- தினமலர் பக்தி மலர் , ஜ்னவரி 17 ,2008.

Sunday, August 17, 2008

14 -வருடம் எதற்காக் ?

கைகேயி இராமனை 14 ஆண்டுகள் வனவாசம் போகவேண்டும் என்று கூறுகிறாள். அதன் காரணம்:-
யுகங்கள் 4 வகைப்படும். அவை கிருத, திரேதா, துவாபர, கலி யுகங்கள். இந்த கலியுகத்தில் தந்தையும், மகனும் 12 ஆண்டுகள் பிரிந்திருந்தால் (ஒருவரை ஒருவர் சந்திக்காமல் ) 12 ஆண்டுகள் கழிந்தபின்பு தந்தை, மகன் என்கிற உறவு முறிந்து விடும, என்கிறது இந்துமத சாஸ்திரம். இந்த கருத்து துவாபர யுகத்தில் 13 ஆண்டுகள், திரேதாயுகத்தில் 14 ஆண்டுகள், கிருத யுகத்தில் 15 ஆண்டுகள்.
இராமாயணம் நடந்த காலம் திரேதா யுகம் . இதில் தசரதனும், இராமனும் 14 ஆண்டுகள் சந்திக்காமல் இருந்தால் தந்தை, மகன் உறவு இல்லாமல் போய்விடும்.
என்வே இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் கழித்து வந்தால் இராமனுக்கு பட்டம் கிடைக்காது, பரதனே அரசாள்வான்.
-கவிஞர். முருக. தியாகராஜன். ( குமுதம் 30-04-1987 )..

Saturday, August 16, 2008

TOUCH !

Skin can only feel 5 different sensations.First of all, there is a feeling of presure . Next trere is a feeling of pain when you hurt yourself. Third and Fourth are the feeling of heat and cold. Lastly is the true sense of touch.

Friday, August 15, 2008

எண்களில் விந்தை !

எண்கள் எப்போதுமே பொய் சொல்லுவதில்லை. அவற்றை விதவித்மாய் கையாள்க் கற்றுக்கொண்டால் , நம்ப முடியாத ஆச்சர்யங்கள் பல வெளியாகிக் கொண்டே இருக்கும்.
உதாரணத்திற்கு, 421,052,631,578,947,368. இது ஒரு முழுத்தொகை. இதனை இரு மடங்காக்கினால் என்ன வரும்? மிக சுலபம்.! கடைசி எண்ணான 8 ஐ த் தூக்கி முதல் எண்ணான் 4 க்கு முன்னால் போடுங்கள்.
1,11,11,111 இந்த எண்ணை 9 ஆல் வகுத்தால் கிடைக்கக்கூடிய ஈவு நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஈவு: 1234567.8.
நன்றி:- முத்தாரம் (15-08-1986).

Thursday, August 14, 2008

கணிதம் !

எண்கள் அதிசயம் ! (மீதி வராதது ).
2520 என்ற எண் மட்டுமே , 1 முதல் 9 வரையிலான எண்கள் அனைத்தும் மீதமில்லாமல் வகுக்கக்கூடிய எண்.
இந்த எண் மடடுமல்ல - இந்த எண்ணின் பெருக்கற்பலன் அனைத்துமே 1 முதல் 9 வரையிலான எண்களால் மீதமில்லாமல் வகுபடக் கூடியவை. இந்த எண் (2520) இவ்வாறு வகுபடக்கூடிய எண்களிலே குறைந்த பட்ச மதிப்புடைய என்ணாகும்.
மீதி வரும் எண்கள் அதிசயம் 1
1) எண் 25201 இதனை 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 என்ற எண்களில் எவற்றால் வகுத்தாலும் மீதி 1 தான் வரும்.
2) எண்கள் 2519, 5033, 10079, இவற்றை 10 ஆல் வகுக்க மீதி 9 ம், 9 ஆல் வகுக்க மீதி 8 ம், 8 ஆல் வகுக்க மீதி 7 ம் , 7 ஆல் வகுக்க மீதி 6 ம்,........2 ஆல் வகுக்க மீதி 1 ம் வரும்.
நன்றி:- தினமணி கதிர் ( 08-06-1986).

Tuesday, August 12, 2008

நாதஸ்வரம் !

"நாதஸ்வரம்"சுமார் 25 முதல் 50 ஆண்டுகள் ஆன , கோவில் தேரின் அச்சு அதாவது ஆச்சா மரங்களில் நாதஸ்வரம் செய்வார்கள். அதில் இசை மிக நன்றாக இருக்கும்..சீவாளி (வாயில் வைத்து ஊதுவது) நாணல் தட்டையில் செய்கிறார்கள்.
-மதுரை. சேதுராமன் பொன்னுசாமி கூறியது. தொலைக் காட்சி(சன்) சப்தஸ்வரம் நிகழ்ச்சி.

Monday, August 11, 2008

இதுக்கு இவ்வளவு.....

ஒரு மைல் என்பது -1609 மீட்டர் அளவு கொண்டது.
ஒரு ஹெக்டேர் -2,47 ஏக்கர்.
ஒரு அவுன்ஸ் -28,34 கிராம்.
ஒரு சதுர மைல் -2,58 சதுர கிலோ மீட்டர்.
ஒரு கிலோ கிராம் -2.2 பவுண்டு.
ஒரு தலைமுறை - 30 வருட கால அளவுக்குச் சமம்.

Sunday, August 10, 2008

"அ "

உருது மொழியை வலமிருந்து இடமாகவும், சீன் மொழியை மேலிருந்து கீழாகவும் வாசிகக் வேண்டும்.
தமிழ், ஆங்கிலம், ல்த்தீன் ப்ரெஞ்சு, உருது மற்றும் சமஸ்கிருத மொழிகளின் முதல் எழுத்து "அ "ஆகும்.

உண்டி 4, சுவை 6 !

"உண்டி நால்விதத்தினில் அறுவகைச் சுவைதனில்" எனப் பெரியபுராணம் கூறும். மேலை நாட்டார் சாப்பிடும் முறையை Eating-Drinking என இருவகைப் படுத்துவர். ஆனால் தமிழ் முறைப்படி பார்த்தால்:-

1)உண்டல்: இலையில், அமர்ந்து உண்ணும் முறை.
2)தின்றல்: மென்று தின்பது (உ.ம் சீடை,முறுக்கு, கறி பொரியல்...)
3)பருகுதல்: குடிப்பன (உ.ம் .காப்பி, தேனீர் ரசம்...)
4)நக்குவன: இலையில் பரிமாறி எடுத்து நாக்கினால் நக்குவன (உ.ம். பாயசம்).

அறுவகைச் சுவை:
இனிப்பு, கார்ப்பு, கசப்பு, புளிப்பு, கைப்பு துவர்ப்பு எனும் அறுவகை சுவை உடைய உணவுப் பொருட்கள்.

நன்றி: பொன். முருகையன்(ஸ்ரீ குமரகுருபரர் மாத இதழ்)

நினைப்பு !

நினைத்ததை அடைந்து விட்டீ ர்களா ?
ஒவ்வொரு கேள்விக்கும் மூன்று வகை பதில்கள் உண்டு. ஒன்று தத்வார்தமான பதில், இரண்டாவது சாமர்த்தியமான பதில், மூன்றாவது சத்தியமான பதில். இந்தக் கேள்விக்கு மூன்று வகை ப்தில்களையும் முன் வைக்கிறேன்.
"எதை ஊன்றி நினைக்கிறாயோ, நீ அதுவாகவே ஆகிறாய். அதுவாகவே ஆன பிறகு அடைதல் ஏது?,அடையாதது ஏது?'
இது தத்துவார்த்தம்.
"நினைத்ததை அடைந்து விட்டால் ல்ட்சியம் தீ ர்ந்து விடும். என்வே தீ ரமுடியாத ஒரு ல்ட்சியத்தை நினைத்துக் கொண்டிருக்கிறேன் " இது சாமர்த்தியம்.
"நினைத்ததைவிட அதிகமாகவே அடைந்திருக்கிறேன். நினைப்பதைவிட அதிகமாகவே அடைவேன் " இது சத்தியம்.
-கவிஞர். வைரமுத்து.

Saturday, August 9, 2008

தர்ப்பண்ம் !

பௌர்ணமிக்குப் பிறகு வரும் 14-வது நாளை 'சதுர்தசி' என்பர். பஞ்சாங்கத்தில் நரக சதுர்தசி எனப்போட்டிருக்கும். (சதுர் தசி என்பது 14 என்ற ர்ண்ணுக்கு வடசொல்.
'தர்ப்பண்ம்' என்றால் 3 தடவை உளளங்கையில் தண்ணீர் எடுத்து கட்டை விரல் வழியாகக் கீழே விடுவது.

Friday, August 8, 2008

இராமன் !

இராமனைப் பற்றிக் கூறுங்கால்; அவன் "பூர்வ பாஷிணஹ" "மித பாஷிண ஹ" "ம்ருது பாஷிணஹ"என்று உயர்வாகச் சொல்கின்றன்ர்.
"பூர்வ பஷணஹ" :- என்பது இராமன் தான் முதலில் வணக்கம் கூறுவான். தன்னைவிட கீழோராயினும் இவரே முதலில் சென்று பெசுவார்.
"மித பாஷிணஹ":- என்றால் இராமன் சிறிதுதான் பேசுவான்.மற்றவர்களிடமிருந்து கேட்பதற்கு ஆவல் உள்ளவன்.
"ம்ருது பஷிணஹ":- என்றால் இராமன் எப்போது பேசினாலும் மிருதுவாகவே, இன்பமாகவே பேசுவான்.
-30-07-1999. வெள்ளி.

Thursday, August 7, 2008

தனிப்பாடல்- சஞ்சலம் !

அன்றுதான் அன்னையும், தந்தையும் அனுபவிப்பதும் சஞ்சலம்,
அங்கொரு ஜ்லத்துளி தரிப்பதும் சஞ்சலம்,
தரித்தபின் ஆளானதும் சஞ்சலம்,
பெண்ணையும் , மண்ணையும் விரும்புவதும் சஞ்சலம்,
பெற்ற மகன் இல்லாதிருப்பதும் சஞ்சலம்,
பெற்ற பின்பும் சஞ்சலம்,
எண்ணரிய திரவியம் தேடியும் சஞ்சலம்,
தேடாதிருப்பதும் சஞ்சலம்,
என்றுதான் சஞ்சலம் ஒழிந்து யான் உன் திருவடிக்கு ஆளாவேனோ!
விண்ணவர் தொழும் கருணைப் பிரகாசமே
வாழும் மயிலேறி வரவேணும் எந்தன் அருகே!
என் அத்தை மகன் .வித்வான் .R.சங்கரனாராயணன். 04-05-1970 ல் கூறக்கேட்டது.

Wednesday, August 6, 2008

களஞ்சியம் - அகராதி !

களஞ்சியம்:- நமக்குத் தெரிந்த பெயரைப் பற்றித் தெரியாத விபரங்களைத் தொகுத்துக் கொடுக்கும் புத்தகம்.
அகராதி:- தெரிந்த வார்த்தைக்கு அர்த்தம் சொல்கிற தொகுப்பு.

கம்பர் !

கம்பர் இரமாயணத்தை எழுதிய பிறகு அதை அரங்கேற்றுவதற்கு அவர் வாழும் பகுதியில் உள்ள எல்லாப் புலவர்களின் ஆசியைப் பெற் வேண்டி ஒவ்வொருவராகச் சென்று ஆசிபெற்று , அம்பிகாபதியிடமும் ஆசிபெற்றார்.
-நன்றி:- பழனி தேவஸ்தான நூலகம், 'கம்பர் வரலாறு' நூல்.

Tuesday, August 5, 2008

செய்தித் துளிகள் !

ஷேக்ஸபியர்:: பிறந்த நாளும் , இறந்த நாளும் ஒரே தேதியில் தான். பிறந்தது 23-04-1564.இறந்தது 23-04- 1616.
கிரேக்க மெகஸ்தனிஸ்: சிறந்த பேச்சாளராக இருந்து சரித்திரத்தில் ஓர் உன்னதமான் இடம் பெற்றாலும் , இளம் வயதில் அவருக்குத் திக்குவாய் ! இழுத்து, இழுத்துத் தடுமாறித்தான் பேச முடியும். !
சாக்ரடீஸ்: மூன்று மகன்கள் இல்வாழ்க்கை திருப்தி இல்லை. எப்பொதும் சண்டை போடும் மனைவி.அவளிடம் மட்டும் சாக்ரடீஸின் தர்க்கம் எடுபடாமல் போனது.
லியோ டால்ஸ்டாய் பிறந்த வருடம் - 1828.
எகிப்து நாட்டின் கடைசி மன்னன்-பரூக்.
இங்கிலாந்தின் சரித்திரத்தை இயற்றியவர்= மெக்காலே/
ஏசுவின் முதல் சீடர்- செயிண்ட் ஆண்ட்ரு.
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் எனற பெயர் நர்ஸிங்குடன் தொடர்புடையது.
முதன் முதலில் உலகப்படம் வரைந்தவர் -தாலமி.
நெல்சன் நெப்போலியனை இறுதியாக வாட்டர் லூ போரில் தோற்கடித்தர்ர்.
வெடி மருந்தைக் கண்டுபிடித்தவர்-ஆல்பிரட் நோபல்.
முதன் முதலில் கட்டப்பட்டதும் , மிகப் பழமையனதுமான கலங்கரை விளக்கம் எகிப்தில் உள்ளது.
காலரா என்ற கொள்ளை நோய்க்கான் கிருமியைக் கண்ட ஜெர்மானியர்_ராபர்ட் கோச்..
ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தை உருவாக்கியவர்- இயான் ஃப்ளௌமிங்.
இயேசுவைக் காட்டிக் கொடுத்த சீடர்- ஜூடாஸ் இஸ்காரியட்.

Monday, August 4, 2008

பாரதியார் !

பாரதியும் மற்றொரு கவிஞரும் மேலுல்கத்தில் சந்திக்கின்றனர். அவர்களுக்குள் உரையாடல் நிகழ்கிறது:
கவிஞர்: "பாரதியாரே ! நீவிர் பாடிய கவிதைகளில் , "காக்கை குருவி எங்கள் ஜாதி" என்று பாடினீரே. பாவம் உம்மை யானை அல்லவா கொன்றுவிட்டது ".
பாரதியார்: "அதனால் தான் , எல்லோருக்கும் எருமை மேல் வரும் எமன் , எனக்குமட்டும் யானை மேல் வந்தான்.!"
-முத்தமிழ் மன்றம் . தொலைக் காட்சி நிகழ்ச்சி.
H.M. திரு.N.இராமகிருஷ்ணன் அவர்கள் 14-07-1990-ல் கூறியதிலிருந்து.

Sunday, August 3, 2008

புதிய ஆடை அணிய...

காரியில் அழுக்கு அது ஆகும் !
கதிரவன் பீடை ஆகும்
மாரியில் நனையும் திங்கள்
வண்புதன் கந்தையாகும்.
வீரியமில்லை செவ்வாய்
வெள்ளியில் மடந்தை சேர்வாள்
கூரிய வியாழன் நன்றாம்
உல்விய ஆடை சாற்ற.
-நடேச. வைத்தியநாதன். கூறக்கேட்டது. (24-07-1996 ).

Saturday, August 2, 2008

மனம் !

ம னம் நமக்கு நண்பனா? பகைவனா?
மனம் ந்ண்பனாகவும் , பகைவனாகவும் விளங்குகிறது. வட மொழியில் ' ஹிதசத்ரு' என்றொரு வர்த்தை . அதன் பொருள்:" நன்மை செய்வது போல தீமை செய்யும் பகைவன்" என்பது.
இதற்கு மனமே தக்க சான்று. மனத்தை நாம் அடிமைப்படுத்தினால் நண்பன். அதற்கு நாம் அடிமையானால் பகைவன்.
விலங்குகள் பெறாத ஒரு வரம் மனிதன் பெற்றிருக்கிறான் அதுதான் மனம்.
நன்றி:- தினமலர். (27- 07-1996).

ஆந்தை சொல் !

ஓர் உரை உரைக்குமாயின் உற்றதோர் சாவு சொல்லும்.
ஈருரை உரைக்குமாயின் எண்ணிய கருமம் நன்றாம்.
மூவுரை உரைக்குமாயின் மோகமாம் மங்கை சேர்வாள்.
நாலுரை உரைக்குமாயின் நாழியில் கலகம் சொல்லும்.
ஐந்துரை உரைக்குமாயின் அங்கதோர் பயணம் சொல்லும்.
ஆறு உரை உரைக்குமாயின் அடுத்தவர் வரவு சொல்லும்.
ஏழு உரை உரைக்குமாயின் , இறந்த பண்டங்கள் போகும்.
எட்டுரை உரைக்குமாயின், கிட்டென சாவு சொல்லும்.
ஒன்பதும். பத்துமாகில். உத்தமம் மிகவும் நன்றே !
-நடேச. வைத்தியநாதன். கூறக்கேட்டது. (24-07-1996).

"காதல் ரசம் சொட்ட, சொட்ட ..."

சாம்பாரை 'குழம்பு' என்றும் சொல்வது உண்டு. சாம்பாரில் 'தான்' உண்டு. ரசத்தில் கிடையாது. ! அதாவது 'தான்' என்கிற அகந்தை நுழைந்து விட்டால் குழம்புகிறோம். அதுதான் சாம்பார்.'தான்' இல்லாத வாழ்க்கை ரசமாகிறது.
-வாரியார் சுவாமிகள்.(08-11-1996-வெள்ளி ).

Friday, August 1, 2008

தெய்வம் !

எல்லா தெய்வ ங்களும் ஒன்றே !
எல்லா மத்த்திலுள்ள தெய்வங்களும் ஒன்றுதான் என்பதை அவற்றின் எழுத்துக்கள் 6 என்பதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.
TEMPLE
CHURCH
MOSQUE
PAGODA

கவிதை !

"இறைவனைப் போற்று, இறைவனைப் போற்று !
மூட மனமே இறைவனைப் போற்று !
காலன் வந்து உன் கதவைத் தட்டினால்
இலக்கணம் உன்னை எப்படிக் காக்கும் !"
--ஆதி சங்கரர். (18-12-1996) புதன்.