பொதுவாக, கூச்சம் என்பது அறிமுகம் இல்லாதவரிடம் ஆறு முதல் எட்டு நிமிடங்கள் வரையும், அறிமுகமானவர்களிடம் இரண்டு முதல் ஐந்து நிமிடங்கள் வரையும் நீடிப்பதாகச் சொல்கின்றன மனநல ஆய்வுகள். அந்த நிமிடங்களைத் தைரியமாகத் தாண்டிவிட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. இந்த நேரத்தைச் சாதகமாக மாற்றத் தெரியாவிட்டால் அதுவே உங்களுக்குப் பாரமாகிவிடும் . உங்களின் கூச்சத்துக்கு நீங்கள் மட்டும்தான் முழுமுதற் காரணம் . ஏனெனில், பிறக்கும்போதே கூச்ச சுபாவத்துடன் யாரும் பிறப்பது இல்லை. 'கூச்சம் என்பது ஒருவகையில் பலர் தங்களின் சௌகர்யத்துக்காக அவர்களே வளர்த்துக்கொள்ளும் ஒரு குணம் ' என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். ' மற்றவர்கள் நம்மைப் பார்த்துப் பரிதாபப்பட வேண்டும் , கருணையாகப் பார்க்க வேண்டும் என்று உள்ளூக்குள் வேண்டி விரும்பியேபலர் கூச்ச சுபாவத்தை வளர்த்துக் கொள்கிறார்கள் . பின்னாளில் அதுவே அவர்களின் வளர்ச்சிக்குத் தடையாகவும் வந்து நிற்கிறது . ஏனெனில், கூச்சம் கொஞ்ச நாளில் பயமாக மாறிவிடும் . நீங்கள் பயந்து ஒதுங்கும்போது உங்கள் மேல் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள். அப்புறம் எப்படி ஜெயிப்பீர்கள் ?
--- ஆ. விகடன் , 26. 05. 2010.
2 comments:
உண்மை தான் நண்பரே. இந்த கூச்சம் நிறைய பேரின் வாழவைக் கெடுத்திருக்கிறது.
கமெண்டில் வேடு வெரிபிகேசனை எடுத்து விடலாமே!
அன்பு ஞா ஞளங்லாழன் , அவர்களுக்கு , கூச்சம் பற்றியும் வேடு வெரிஃபிகேஷன் பற்றியும் கூறியுள்ளீர்கள் . மிக்க நன்றி !
Post a Comment