பலரின் உயிரை கொடூரமாகப் பறித்த ஹிட்லருக்கு , அன்பு மனைவியின் உயிர் தன் கண் முன் பிரிவதைக் காணவேண்டிய பரிதாப சூழ்நிலை . ரஷ்யப் படை பெர்லினை நெருங்கிக்கொண்டு இருக்கிறது . நம்பியவர்கள் எல்லாம் கடைசி நிமிடத்தில் கைவிட்டுவிட்டார்கள் . ' இனி போரிட்டு ஜெயிக்க முடியாது ! ' என்பது ஹிட்லருக்குப் புரிகிறது . தன்னுடன் இருந்த அதிகாரிகளிடம் , ' எங்காவது போய்விடுங்கள் ' என்று உத்தரவிடுகிறார் . காதலி ஈவா ப்ரவுனுடன் தனியறைக்குச் செல்லும் ஹிட்லர் , காதலியின் விருப்பத்துக்கு இணங்க அவரைத் திருமணம் செய்துகொள்கிறார் . சிறிது நேரத்தில் ரஷ்யப் படைகள் 300 மீட்டர் தூரத்தில் நெருங்கிவிட்டன . ஈவா ப்ரவுன் சயனைடு சாப்பிட்டு வாயில் நுரை தள்ளி சுருண்டு விழுந்தார் . ஹிட்லரோ துப்பாக்கியை வாயில் வைத்து , மூளை சிதறும்படி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு செத்துப்போனார் . இவர்கள் மட்டுமல்ல ; தோட்டக்காரர் , சமையல்காரி , கார் ஓட்டுனர் போன்றோர் ஹிட்லரின் இறுதி மூச்சு பிரியும் வரை கூடவே இருந்து , கூடவே சேர்ந்து தங்கள் உயிரையும் மாய்த்துகொண்டார்கள் . வாழ்நாள் முழுக்க கொடூரமான சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் கடைசி நேரத்தில் தற்கொலை முடிவை எடுப்பதற்கு வேறோரு காரணமும் இருந்தது .
--- க்ளைமாக்ஸ் விகடன் இணைப்பு , 30 . 06 . 2010 .
No comments:
Post a Comment