பொதுவாக கம்ப்யூட்டரில் வருடத்தைக் குறிப்பிட இரண்டு தசம எண்களைத்தான் ( 1976 என்பதை ' 76 என்று ! ) பயன்படுத்தினார்கள் . 1999 வரையிலான வருடங்களை சுருக்கமாக 96 , 97 , 98 , 99 என்றுதான் குறிப்பிட்டார்கள் . ஆனால் , 2000 வருடம் பிறந்தபோது , நான்கு தசம எண்கள் வந்துவிடுகிறது . இதற்கு ஏற்றாற்போல் கணிப்பொறிகள் புரொகிராம் செய்யப்படவில்லை . ஆகவே , கணிகள் மீண்டும் தானாகவே 1900 என நினைத்து 00, 01, 02, 03,.... 96, 97 , 98, 99 என்று கணக்கிடத் தொடங்குமோ என்று கிலி கிளப்பினார்கள் சாஃப்ட்வேர் ஆசாமிகள் . 1958 -லேயே இப்பிரச்னைப்பற்றி பாப் பர்னோ என்பவர் ஆய்வு மேற்கொண்டார் . மைக்ரோசாஃப்ட் எக்ஸெல் ( ஜனவரி 0, 1900 என்று தேதி காட்டியது ) .
ஆனால் , 2000 பிறந்த கணத்தில் எந்த விபரித வில்லங்கமும் அரங்கேறவில்லை . ' ஹாப்பி நியூ இயர் ' என்று வாழ்த்தியபடி கணினிகள் தேமேவென்று பணிசெய்து கிடந்தன . அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற கம்ப்யூட்டர்களை பெருமளவில் பயன்படுத்திய நாடுகளில், பெரும்பாலான கம்ப்யூட்டர்களில் வருடங்களை நான்கு தசம எண்களாக குறிப்பிட ஆரம்பித்துவிட்டார்கள் . இதனால், அங்கே மிக சொற்ப அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டது . கம்ப்யூட்டர் பயன்பாடு அதிகம் இல்லாத இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் அப்படி ஒரு பிரச்னை வந்ததாகவே தெரிய வில்லை.
பயங்கரமாகச் சித்தரிக்கப்பட்ட Y 2 K வில்லன், கைப்புள்ள கணக்காக பிஸ்ஸென்று ஆகிவிட்டது !
--- க்ளைமாக்ஸ் விகடன் இணைப்பு , 30 . 06 . 2010 .
No comments:
Post a Comment