' நான் வேறு , அடுத்தவர் வேறு ' என்ற எண்ணம்தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஆணிவேர் .
ஆணிவேர் வெட்டப்பட்டால் மரம் சாய்ந்து விடும்.... ' ஒப்பீடு ' எண்ணத்தை அகற்றிவிட்டால் பிரச்னைகள் ஓய்ந்துவிடும் .
இதைத்தான் --
நமது ஆன்மிகப் பாரம்பரியம் , ' தத்வமஸி ' என்ற அடிப்படை அறிவுரையாக்கியுள்ளது !
தத்வமஸி = தத் + த்வம் + அஸி . தத் என்றால் ' அது '; த்வம் என்றால் ' நீ '; அஸி என்றால், அறிவாயாக ! ' அதாவது , ' அதுவே நீ என்று அறிவாயக ! ' என்பதே ஆன்மிகத்தின் அடிப்படை அறிவுரை .
'அது ' என்பது அடுத்தவரின் அனுபவங்கள் ; ' நீ ' என்பது உங்களுடைய அனுபவங்கள் .
'அதுவே நீ என்று அறிவாயாக ' என்றால் , ' அடுத்தவரும் நீங்களும் சமம் ' என்று அர்த்தம் .
அடுத்தவரும் நீங்களும் சமம் என்ற நிலையில் , அடுத்தவரையும் நம்மையும் ஒப்பிட வேண்டிய அவசியம் எதற்கு ? அது வீண்வேலை அல்லவா ?
---. தினமலர் / 11 . 9 . 2010.
No comments:
Post a Comment