Friday, May 27, 2011

கணக்கு மேஜிக் !

உங்கள் நண்பரிடம் , " நான் ஒரு சிறு கணக்கு சொல்வேன் . விடையின் முதல் இலக்கத்தைச் சொன்னால் முழு விடையையும் நானே சொல்லிவிடுகிறேன் ! " என்று கூறுங்கள் .
பிறகு இப்படிச் சொல்லுங்கள் :
1 . ஏதாவது மூன்று இலக்க எண்ணை எழுதிக்கொள்.
2 . அந்த எண்ணை மாற்றி எழுது . ( அதாவது 123 என்றால் 321 ).
3 . இரு எண்களில் பெரியதில் இருந்து சிறியதைக் கழி .
4 . விடையில் 3 இலக்கங்கள் இருந்தால் முதல் இலக்கத்தைச் சொல் . விடை இரண்டு இலக்கமாக இருந்தால் முதல் இலக்கம் '0 ' என்று சொல் .
இதன்பிறகு நீங்கள் செய்ய வேண்டியது , ஒரு சிறிய கணக்கு ...
நண்பர் சொல்லும் எண்ணை 9 -ல் இருந்து கழிங்க .அதுதான் , விடை எண்ணின் கடைசி இலக்கம் ; நடு இலக்கம் எப்போதுமே 9 ஆகத்தான் இருக்கும் ! பிறகு இந்த 3 இணைத்துச் சொல்லி அசத்துங்கள் !
அவர் முதல் இலக்கம் 0 என்று சொன்னால் , நீங்கள் எந்தக் கணக்கும் செய்யாமல் ' 99 ' என்று சொல்லிவிடலாம் !
ஒரு உதாரணம் : நண்பர் நினைத்த எண் 234 ; மாற்றி எழுதினால் 432 ; 432 ல் இருந்து 234 -ஐக் கழித்தால் , 198 ; உங்கள் நண்பர் சொல்லும் முதல் இலக்கம் 1 ; இதை 9ல் இருந்து கழித்தால் 8 ; எனவே , விடையின் கடைசி இலக்கம் 8 ; நடு இலக்கம் ( எப்போதுமே ! ) 9 ; எனவே; நீங்கள் சொல்ல வேண்டிய விடை 198 .
--- தினமலர் . செப்டம்பர் 17 , 2010 .

No comments: