கச்சா எண்ணெயை சுத்திகரித்துதான் பெட்ரோலும் டீசலும் தயாரிக்கப்படுகின்றன . சுத்திகரிப்பின்போது 35 முதல் 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் பெட்ரோல் பிரித்தெடுக்கப்படுகிறது ; 250 முதல் 300 டிகிரியில் டீசல் பிரித்தெடுக்கப்படுகிறது .
டீசலை விட பெட்ரோலில் சுத்தத்தன்மை அதிகம் ; அடர்த்தி குறைவு . டீசலை விட பெட்ரோல் விரைவாகத் தீப்பற்றும் ஒரு கிலோ .பெட்ரோல் எரியும் போது, சராசரியாக 2,300 கிலோ கார்பன்டையாக்சைடு உருவாகும் ; ஒரு கிலோ டீசல் எரியும்போது , சராசரியாக 2,680 கிலோ கார்பன்டையாக்சைடு உருவாகும் .
பெட்ரோல் எஞ்சினைகளை விட டீசல் எஞ்சின்கள் நீண்டகாலம் உழைக்கும் . காரணம், எஞ்சின்களில் உராய்வைக் குறைக்கும் பொருட்களை ( லூப்ரிகன்ட்ஸ் ) பெட்ரோல் அழித்துவிடும் ; டீசல் அழிக்காது .
டீசலின் சக்தி அளவு , பெட்ரோலைவிட அதிகம் . இதனால்தான் டீசல் வாகனங்களின் மைலேஜ் ( ஒரு லிட்டருக்கு எத்தனை கி. மீ ., பயணம் என்ற கணக்கு ) அதிகம் . சராசரியாக சொல்வதானால் , ஒரு லிட்டர் பெட்ரோலில் 12 கி. மீ., போகலாம் ; ஒரு லிட்டர் டீசலில் 16 கி. மீ., போகலாம் . ஆனால், டீசல் வாகனங்களில் பெட்ரோல் வாகனங்கள் போல் வேகம் இருக்காது .
எரிபொருள் மற்றும் பராமரிப்பு செலவு குறைத்து ' பணத்தில் ' லாபமடைய வேண்டுமானால் டீசல் வாகனம் நல்லது ; வாகனத்தின் வேகத்தை அதிகரித்து , ' நேரத்தில் ' லாபமடைய வேண்டுமானால் பெட்ரோல் வாகனம் நல்லது .
--- தினமலர் . செப்டம்பர் 17 , 2010 .
No comments:
Post a Comment