முதன் முதலில் ஸ்ரீ ராம ஜயம் என்பதை எழுதிய மகாபுருஷரே திருமணம் ஆகாத , புலன் அடக்கம் உள்ள , கட்டை பிரம்மச்சாரி ஆஞ்சநேயர் .
' ராம ராவண யுத்தம் முடிந்த பிறகு ஸ்ரீ ராமரின் வெற்றிச் செய்தியைச் சீதையிடம் சொல்லவந்தார் ஸ்ரீ ஆஞ்சநேயர் . உணர்ச்சி ததும்பிய நிலையில் அந்தச் சொல்லின் செல்வனால் பேசமுடியவில்லை . கண்களில் ஆனந்தக் கண்ணீர் கோலமிட்டது .
உணர்ச்சி கொப்பளிக்கும்போது சொற்கள் வாய்வழி வரமறுப்பது உலக இயற்கை . என்ன செய்தி என்று பிராட்டி ஆர்வத்துடன் கேட்டதும் , முன்னால் கிடந்த மணல் மீது ஸ்ரீ ராம ஜயம் என்று கைவிரலால் அனுமன் எழுதினார் என்பது குறிப்பு .
--- சுகி சிவம் . அவள் விகடன் / அக்டோபர் 1 / 1999 .
No comments:
Post a Comment