" பஞ்சாங்கம் " என்றால் ஐந்து உறுப்புகள் கொண்ட அட்டவணை என்று பொருள் .
"வாரம் , திதி , கரணம் , நட்சத்திரம் , யோகம் இவைதான் பஞ்சாங்கத்தில் உள்ள ஐந்து உறுப்புகள் ."
ஞாயிறு முதல் சனி வரை உள்ள கிழமைகள்தான் வாரம் .
திதி என்பது சந்திரனின் பூமிசுற்றுப் பாதையின் 30 சமகோணப்பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்கும் காலத்தைக் குறிக்கும் . அமாவாசை, பிரதமை, துதியை, திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தி, பூரணை இவைகள்தான் திதி. ஒரு மாதத்தில் வளர்பிறைக் காலம், தேய்பிறைக் காலம் என்று இரு பகுதிகள் உள்ளன . ஒவ்வொரு பகுதியிலும் இந்த திதிகள் இருக்கும் . இந்த இரு பகுதிகளையும் பஞ்சாங்கத்தில் சுக்கிலபட்ச திதி , கிருஷ்ணபட்ச திதி என்பார்கள் .
கரணம் என்பது திதியின் அரைபங்கு . அதாவது 30 திதிகளுக்கு 60 கரணங்கள் .
நட்சத்திரம் என்பது ராசி சக்கரத்தில் ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும் . சந்திரன் பூமியைச் சுற்றி வரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் சொல்வார்கள் .
--- தினமலர் . செப்டம்பர் 17 , 2010 .
No comments:
Post a Comment