* பீரின் வரலாறு, தயாரிப்பு முறை அனைத்தும் தியரி பாடங்கள்தான் . பார்லி, ஹாப்ஸ், ஈஸ்ட், நீர் இந்த நான்கின் கலவைதான் பீர் . நீரில் பார்லியை மசித்துக் கொதிக்கவைத்து ,பின்பு ஈஸ்ட் சேர்த்து நொதிக்கவைத்து கடைசியாக ஹாப்ஸ் எனப்படும் ஒரு தாவர வகையைச் சேர்த்தால் பீர் தயார் .
* ' 86 சதவிகிதம் பெண்கள் தம் அடிக்காத ஆண்களையே விரும்புகிறார்கள் ' என்கிறது ஒரு சர்வே !
* குடிமகங்களை நாலு வகைகளாகப் பிடிக்கலாம் . ஒரு மாதம் முழுக்க ஒருவர் குடிக்கவே இல்லையென்றால் ' white zone '. அதாவது, சமத்து என்று அர்த்தம் . ஒன்று முதல் ஏழு யூனிட்டுகள் குடித்தால் ' green zone '. ( ஒரு யூனிட் என்பது பிராண்டி விஸ்கி வகையறாக்களில் 30 மி.லி. ) அவர் கட்டுப்பாடான நிலையில்தான் இருக்கிறார் . 8 முதல் 20 யூனிட்டுகள் வரை குடித்தால் ' amber zone '. அவரைக் கண்காணிப்பது அவசியம் . 21 யூனிட்டுகளுக்கு மேல் சென்றால் ' red zone '. உடனடியாக அவர் குடிப்பதற்குத் ' தடா ' போட வேண்டும் . பாரதத் திருனாட்டில் பத்துப் பேருக்கு எட்டுப் பேர் ' தடா ' ( red zone ) லிமிட்டுக்குள் வருபவர்கள் .
* ' கர்நாடகாவில் மதுக்கடைகள் மூலமாக வருமானத்தில் 60 சதவிகிதம் குடிப்பழக்கப் பாதிப்புகளைச் சரி செய்யவே செலவழிக்கப்படுகிறது ' என்கிறது ஓர் ஆய்வு . ' இந்தியாவின் பெரும்பாலான சாலை விபத்துகளுக்குக் காரணம் ' டிரங்க் அண்ட் டிரைவ் ! ' என்கிறது யுனெஸ்கோ புள்ளிவிவரம் .
* உலகிலேயே மிகப் பெரிய ' விஸ்கி சந்தை ' எது தெரியுமா ? நமது பாரதம் தான் . தகவல் உபயம் : வர்த்தக மையம் !
* 1970 -ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த நிக்ஸன்தான் சிகரெட் டப்பாக்களின் மேல் ' எச்சரிக்கை ' வாசகம் எழுதும் சட்டத்தைக் கொண்டுவந்தார் .
* உங்கள் குழந்தை ஹோம்வொர்க் செய்யும்போது ஏதேனும் தவறு வந்தால் அழித்துத் திருத்தப் பயன்படுத்தும் வொயிட்னர் மீது எதற்கும் ஒரு கண் வைத்துக்கொள்ளுங்கள் . ஏனென்றால் , இன்றைய புத்திசாலிக் குழந்தைகள் அதைப் போதைப் பொருளாகப் பயன்படுத்துகின்றனர் .
--- போதை விகடன் . 16 / 12 / 2009.
No comments:
Post a Comment