பாட்டில் குடிநீருக்கு பி ஐ எஸ் சான்றிதழ் கட்டாயம் .
மத்திய நுகர்வோர் அமைச்சகம் அதிரடியாக ஒரு உத்தரவை வெளியிடுள்ளது . இதன்படி, பி ஐ எஸ் சான்றிதழ் பெறாமல் குடிநீரை விற்க யாருக்கும் அனுமதி இல்லை . பி ஐஎஸ் சான்றிதழ் பெற்று சந்தையில் குடிநீர் விற்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
சந்தையில் விற்கப்படும் உணவுப்பொருட்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் வாங்கி பரிசோதித்து தரக்கட்டுப்பாட்டு விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று பி ஐ எஸ் அமைப்பு சோதித்து வருவது குறிப்பிடத்தக்கது . 1955 உனவு கலப்பட தடுப்புச் சட்டத்தின் கீழ் பாட்டில்கள், கேன்களில் அடைக்கப்பட்டு விற்கப்படும் குடிநீருக்கு இருவிதமான சான்றிதழ்களை பி ஐ எஸ் அமைப்பு வழங்கிவருகிறது . பேக்கிங் செய்யப்பட்ட இயற்கையான மினரல் வாட்டர் ( ஐஎஸ் 13428 ; 2005 ), இயற்கையான மினரல் வாட்டர் அல்லாத தண்ணீர் ( பிஎஸ் 14543 ; 2004 ) என இரு வகைகளில் பி ஐஎஸ் சான்றிதழ் வழங்கப்பட்டுவருகிறது .
இப்போதைய நிலையில் பி ஐஎஸ்ஸின் முறையான அனுமதி பெற்று 18 பேக்கேஜ்டு நேச்சுரல் மினரல் வாட்டர் நிறுவனங்களும் 2 ஆயிரத்து 354 ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ் முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிறுவனங்களும் 633 இயற்கை ஆதாரங்களில் இருந்து நேரடியாக பெறப்பட்ட தண்ணீர் வழங்கும் நிறுவனஙகளும் சந்தையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது .
--- தினமலர் . 26 . 9 . 2010 .
No comments:
Post a Comment