Wednesday, June 29, 2011

தெரியுமா ? தெரியுமே !

* ஒரு கிராம் தண்ணீரை ஒரு டிகிரி சென்டிகிரேட் சூடேற்ற என்ன சக்தி தேவைப்படுமோ அது ஒரு கலோரி . பொதுவாக்கி பார்த்ததில் ஆணுக்கு 2900 , பெண்ணுக்கு
2200 கலோரி உணவு ,தினமும் தேவை --- தினகரன் . 29 .9 .2010.
* ஒரு வார்த்தைக்குப் பல அர்த்தங்கள் இருக்கும் . அதேபோல ஓர் அர்த்தத்துக்குப் பல வார்த்தைகள் இருக்கும் . இவற்றை ' தெசாரஸ் ' ( Thesaurus ) என்போம் . இவற்ரை சிறந்த அகராதி மூலம் தெரிந்துகொள்ளலாம் . --- ஆனந்தவிகடன் . 22 . 9 . 2010 .
* அரைஞாண் என்பது : அரை என்றால் இடுப்பு , ஞாண் என்றால் கயிறு . ஆனாலும், ஏன் அரைஞாண் கயிறு என்கிறார்கள் . --- ஆனந்தவிகடன் 13 . 10 . 2010 .
* எந்த அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்து தன் வாழ்நாள் முழுவதும் போராடினாரோ , அதே அமெரிக்காவில் இப்போது அதிகம் விற்பனையாவது சே குவேராவின் உருவம் பதித்த டி - ஷர்ட்டுகள்தான் . சே என்னும் புரட்சிக்காரனையும் ஒரு பிராண்ட் ஆக்கிவிட்டார்கள் !
* திரையுலகின் பிதாமகர் அகிரா குரோசோவா இயக்கிய மிகச் சிறந்த படம் ' ரொஷோமோன் '. அகிரா கொஞ்சம் ரிவர்ஸில் சிந்தித்ததால் ' ஃப்ளாஷ்பேக் ' என்கிற யுத்தி சினிமாவுக்குக் கிடைத்தது .
* குறைந்த செலவில் , குறுகிய நேரத்தில் வீடு கட்டும் திட்டம் ஒன்றை ஜி.டி.நாயுடு தயாரித்தார் . 7.11..1967 அன்று காலை 9.30 மணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது . அடுத்த நாள் மாலை 3.45 மணிக்கு கட்டப்பட்ட வீட்டின் திறப்பு விழா நடத்தப்பட்டது .
* தங்களை பிரிட்டனின் காலனி நாடு என்று பெருமையாகச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள் அமெரிக்கர்கள் . 1776 ம் ஆண்டு தாமஸ் பெய்ன் என்பவர் ' அமெரிக்கர்களே ... சிந்தித்துப் பாருங்கள் ! ஒரு கண்டம், ஒரு துணைக்கண்டத்தை ஆளலாம் . ஆனால், பிரிட்டன் என்கிற துணைக்கண்டம், அமெரிக்கா என்கிற கண்டத்தை ஆளலாமா ? என்று கேள்வி கேட்டுவைத்தார் . சிம்பிளான கேள்விதான் . ஆனால், அது அமெரிக்கர்களின் சுயமரியாதையை உசுப்பியது . பிரிட்டனுக்கு எதிராகப் போராட்டங்கள் துவங்கின . அமெரிக்கா, சுதந்திர நாடு ஆனது .
* பைபிள் பேசி
ரைஃபிள் விற்கும்
அமெரிக்கா
உன்னையும் என்னையும்
மறு கன்னம் காட்டச் சொல்லி
மறுபடி மறுபடி அறையும் !
--- புரட்சி விகடன் . 6 .1 .10 .

No comments: