காதலில் விழ வைப்பது. இதயம் அல்ல , மூளையாம் . இனி , உங்க ஆளை பார்த்தால், என் இதயம் கவர்ந்தவள் / ன் என்று சொல்லாதீங்க , மூளை கவர்ந்தவள் / ன் என்று சொல்லுங்க . ஏனெனில் மனிதனை காதலில் விழ வைப்பது இதயம் அல்ல, மூளைதான் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது
ஆராய்ச்சியில் ஈடுபட்ட சைராக்யூஸ் பல்கலைக்கழக ஸ்டெபானி ஆர்டிக் கூறியிருப்பதாவது :
காதலில் விழும்போது போதை அருந்தியது போன்ற உணர்வு மட்டும் ஏற்படுவதில்லை . மூளையின் அறிவுசார்ந்த பகுதிகள் தூண்டப்படுகின்றன . ஒருவர் காதல் வயப்படும்போது, உணர்வுகளை வெளிப்படுத்த ' டோபாமைன் ', ' ஆக்சிடாசின் ', ' அட்ரினலைன் ', ' வாசோபிரசன் ' ரசாயனங்களை தூண்ட, மூளையின் 12 பகுதிகள் இயங்குகின்றன . இவைகள்தான் காதல் போதையில் உளற வைப்பது, உடல் அசைவுகளை வெளிப்படுத்துவது போன்றவற்றை செய்ய வைக்கின்றன , காதல் கை கூடாத போது, மன அழுத்தம், உணர்வு ரீதியான பாதிப்புகள் ஏற்படுகின்றன . நாம் நம்பிக்கொண்டு இருப்பதுபோல இதயம் உடைவதில்லை . காதலால் தூண்டப்படும் மூளையின் பகுதி எது என்பது தெரிந்துவிட்டதால், காதலால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை டாக்டர்களால் உனரமுடியும் . காதலிப்பவர்களின் நாளங்களில் ரத்த ஓட்டமும் அதிகமாக இருக்கும் . இதுதான் காதலில் விழ வைக்கிறது . பார்த்ததும் காதல் வரவழைப்பது ரத்த மூலக்கூறுகள் தான் .
காதலுக்கு மூளைதான் காரணம் என்றாலும், அதற்கேற்ப லப்டப் என்று வேகமாக துடிப்பதில் இதயமும் கொஞ்சம் தொடர்பு கொண்டுள்ளது . காதல் அறிவியல் ரீதியிலான அடிப்படை ஆதாரம் கொண்டது என்பதை, இந்த ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது . இனி, காதலுக்கு பரிசளிப்பதாக இருந்தால் கீ செயின் முதல் நைட் லாம்ப் வரை இதயத்தை தேடாதீங்க . உங்க மூளையை பரிசா அளியுங்க .
--- தினகரன் ,26 , அக்டோபர் 2010 .
அழகான ஒரு பெண், ' நான் உன்னைக் காதலிக்கிறேன் ' என்று ஒரு வாலிபனிடம் சொல்லும்போதும், இளம்பெண்ணிடம் காதலை இளைஞன் சொல்லும்போதும் இதயத்தைவிட மூளை 12 முறை தூண்டப்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் . இதயம் பயத்தில்தான் துடிக்கிறது அல்லது உனர்ச்சிவசப்பட்டு அதிகம் துடிக்கிறது அல்லது காதல் வயப்படும்போது அதிகம் துடிப்பதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் .
இப்படி அரும்பாடு பட்டு காதலுக்கு எது முக்கியம் என்பதை கண்டுபிடித்த ஆய்வாளர்களின் தலைவர் ஸ்டீபன் ஆர்ட்டிக் காதல் வயப்பட்ட 5 நொடிகளுக்குள் மூளை உற்சாகமடைந்துவிடுகிறது என்று சொல்லியிருக்கிறார் . இதன் காரணமாகத்தான் உடம்பில் ஒரு ரசாயனம் சுரக்கிறது . இது ஒருவகையில் ந்றுமணம் என்று சொல்லலாம் . அதற்கு யுபொர்பியா என்று பெயர் என்றும், இத்தனை வேலைகளையும் இதயம் செய்வதில்லை, மூளையே செய்கிறது என்றும் மேலும் ஒரு ஆதாரத்தை அவர் போட்டு உடைக்கிறார் .
--- தினமலர் , 29 , அக்டோபர் 2010 .
No comments:
Post a Comment