மனித ஆணின் மரபணுக்கள் மாறிக்கொண்டே இருக்க, அவன் உடல் டெஸ்டோஸ்டீரான் என்கிற ஆண் இன ஹார்மோனை அதிகமாக உற்பத்தி செய்ய ஆரம்பிக்கிறது . இந்த டெஸ்டோஸ்டீரான், ரொம்பவே சுவாரஸ்யமான ஒரு ஹார்மோன் . இந்த ஹார்மோன்தான் ஆண்மைக்கே காரணம் . சொன்னால் ஆச்சர்யப்படுவீர்கள்..... ஜனிக்கும்போது, எல்லாக் கருக்களுமே பெண்ணாகத்தான் உருவாகின்றன . இன்றும் மனிதக் கருக்கள் அனைத்துமே ஆரம்ப காலத்தில் பெண் வடிவாகத்தான் இருக்கின்றன . ஆறு வாரங்கள் இப்படிப் பெண்ணாகக் கருவறை வாசம் செய்த பிறகுதான், Y குரோமோசோம் இருக்கும் கருக்கள், டெஸ்டோஸ்டீரானை உற்பத்தி செய்ய ஆரம்பிக்கின்றன . இந்த டெஸ்டோஸ்டீரான் அந்தக் கருவின் உடல் முழுக்கப் பரவி, ஏற்கனவே பெண்ணாக இருக்கும் இந்தக் கருவை, வேரில் இருந்து நுனி வரை rewinding செய்து ஆண்மைப்படுத்திவிடுகிறது . இப்படி mesculinize செய்யப்படுவதால்தான் ஆண் உறுப்புக்கள், ஆண்மைத்தனமான உடல் அமைப்பு, ஆண் என்கிற பாலியல் அடையாளம் எல்லாம் ஏற்படுகின்றன .
--- ' உயிர்மொழி ' ஆண் பெண் ஊஞ்சல் தொடரில் , டாக்டர் ஷாலினி . ஆனந்த விகடன் , 8 . 12 . 2010 .
No comments:
Post a Comment