Thursday, September 22, 2011

ஒட்டாததும், ஒட்டுவதும் !

திருக்குறளில், 35 வது அதிகாரம் துறவு - ல், "' யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன் " என்ற குறள் . " எந்தெந்தப் பொருள்களில் எல்லாம் மனமானது விலகி இருக்கிறதோ, அந்தப் பொருள்களால் நமக்குத் துன்பம் கிடையாது . மனது ஒட்டாமல் இருக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய இந்தக் குறளை உச்சரிக்கும்போது உதடுகள்கூட ஒட்டாது . உதடு ஒட்டாமல் உச்சரிக்கக்கூடிய ஒரே குறள் இதுமட்டுமே .
அதேபோல, வான்சிறப்பு பற்றிச் சொல்லும்போது, 2 வது அதிகாரத்தில் வரும் " துப்பார்க்கு துப்பாய . துப்பாக்கி துப்பார்க்கு துப்பாய தூவும் மழை " எனத் தொடங்கும் குறள், " மழை குறிப்பிட்ட இடைவெளியில் பூமியைத் தொட்டுக் கொண்டே இருக்க வேண்டும் " என்று அறிவுறுத்துகிறது அந்தக் குறளின் ஒவ்வொரு வார்த்தையிலும் உதடுகள் ஒட்டும் .
--- வனிதா ,ஆசிரியை . குழந்தைகளுக்கான சிறப்புப் பயிற்சி , அரும்பாக்கம் சென்னை .. ஆனந்த விகடன் , 8 . 12 . 2010 .

3 comments:

-/சுடலை மாடன்/- said...

//உதடு ஒட்டாமல் உச்சரிக்கக்கூடிய ஒரே குறள் இதுமட்டுமே .//

வேறு குறள்களும் இருக்கின்றன என நினைக்கிறேன். கீழே இன்னொரு எடுத்துக்காட்டு:

எய்தற்கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கரிய செயல்

நன்றி - சொ.சங்கரபாண்டி

க. சந்தானம் said...

அன்பு சுடலை மாடன், அவர்களே ! நன்றி !

Unknown said...

208,240,286,310,341,419,427,472,489,516,523,678,679,894,1080,1177,1179,1211,1213,1214,1236,1286,1296 இந்த குற்றங்களும் உதடுகள் ஒட்டாத திருக்குறள்கள்