வேதங்கள் ' அஹம் பிரம்மாஸ்மி ' என்று சொல்கிறது . நானே பிரம்மம் . நானே இறைவன் என்று விளக்கம் சொல்லியிருக்கிறார்கள் . தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம் என்கிறார்கள் . இதுதான் உண்மையான நிலையை அறியும் முறை என்று வேத ஆகமங்கள் கூறுகின்றன .
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாடு தத்துவ ஞானத்தில் மிகவும் சிறப்பாக விளங்கி இருப்பதாக சரித்திரச் சான்றுகள் கூறுகின்றன . அந்நாட்டில் அத்தீனியன் கோயில் வாசலில் " GNOTHE SEAVTON " அதாவது " KNOW THYSELF " -- " தன்னை அறி " என்று பொறிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள் .
சாதாரண சராசரி மனிதர்கள் ஐந்து சதவிகிதம்தான் தங்கள் மூளையின் சக்தியைப் பயன்படுத்தி வருகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா ?
உலகில் மாபெரும் அறிவாளிகள் தங்கள் மூளையின் ஆற்றலில் பதினைந்து சதவிகிதம்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியுமா ? நாம் மனிதப் பிறவி எடுத்துவிட்டோம . ஆகவே, நமது முன்னேற்றத்துக்காக நாம் நமது மனோ சக்திகளை ஐம்பது சதவிகிதமாவது பயன்படுத்திப் பலன் அடைய வேண்டாமா ? யோசியுங்கள் .
நீங்கள் உங்களிடம் மறைந்து கிடக்கும் ஆற்றல்களை உணர்ந்துகொண்டு செயல்பட்டால் இப்போது கிடைப்பதைவிட 25 மடங்கு 50 மடங்கு வசதிகளை நீங்கள் பெறலாம் . ஆகவே, உங்களை உணர்ந்து செயல்பட ஆரம்பியுங்கள் .
--- என்.தம்மண்ண செட்டியார் , ' உன் உள்ளே இருக்கும் மாபெரும் ஆற்றல்கள் ' நூலில் .
--- நூல் உதவி : செல்லூர் கண்ணன் , செல்லூர் .
No comments:
Post a Comment