மனைவியை ஏமாற்றுகிறீர்களா ? அது உங்கள் மரபணுவின் குற்றம் .
மனைவியை ஏமாற்றும் கணவர், கணவரை ஏமாற்றும் மனைவி இதற்கெல்லாம் அவர்களின் சதித்திட்டம் காரணம் அல்ல , ஜீன் எனப்படும் அவர்களின் மரபணுதான் காரணம் என்று அமெரிக்காவின் பிங்காம்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் .
இப்படி பரஸ்பரம் ஏமாற்றும் கணவர், மனைவியரை பார்த்து " அவர் என்ன செய்வார், அவரது கிரகம் பிடித்து ஆட்டுகிறது " என்பார்கள் . இங்கே விளையாட்டாகச் சொல்லும் கிரகம்தான் விஞ்ஞானபூர்வமாக ஜீன் என்று சொல்லப்படுகிறது போலும் .
ஏமாற்றும் குணமுடையவர்களின் உடலில் இருக்கும் டி.ஆர்.டி.4 என்ற ஜீன்தான் அவர்களை அப்படி எல்லாம் செய்யச்சொல்கிறது என்பதை ஆய்வுக்குழுவினர் கண்டுபிடித்தனர் .
இந்த வகை ஜீன் இருந்தால், அவர்கள் மனைவிக்குத் தெரியாமல் செக்ஸ் வைத்துக்கொள்ள விரும்புவார்கள் . சிறுசிறு குற்றங்கள் செய்வார்கள் . இதை என்னதான் தடுத்து நிறுத்த முயன்றாலும் முடியாது . இத்தகைய குணங்களை கொண்ட பலாஆயிரம் பேரின் தனிப்பட்ட நடவடிக்கைகளையும் அவர்களின் ஜீன் அமைப்பையும் ஒப்பிட்டு பார்த்தபோது இது தெரிய வந்தது . எனவே, ஏமாற்றும் குணமுடையவர்களை மருந்து கொடுத்தோ, தண்டனை கொடுத்தோ திருத்த முடியாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் . ஆக, கிரகம் ஆட்டுகிறது என்று நமது ஊர் பெரிசுகள் சொல்வது சரிதான் போலும் .
---தினமலர் , 3 . 12 . 2010 .
No comments:
Post a Comment