" ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணி ! '
இப்ப இருக்கிற நிலைமையில ஒரு பொய்யைச் சொல்லிக்கூட கல்யாணம் பண்ண முடியாது ! இதுல, ஆயிரம் பொய் வேற சொல்லி கல்யாணத்த பண்ணிட்டு யாரு திண்டாடுறது ? ' ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணு'ங்கறதுதான் உண்மையான அர்த்தம் . அதாவது... பொண்ணு பாக்க, மாப்பிள்ளை பாக்க, சொந்தபந்தம் விசாரிக்க, நிச்சயதார்த்தம், பெண் அழைப்பு...இப்படி ஏகப்பட்ட சடங்கு, சம்பிரதாயங்களையெல்லாம் நடத்தனும்னா ஊரு, உறவுமுறைக்குத் தகவல் சொல்லித்தான் ஆகணும் . அதுக்காக, ஆயிரம் தடவைகூட போய் பார்த்து கல்யாணத்தை முடிக்க வேணும் . அதுதான் இப்படி ' ஆயிரம் பொய் சொல்லி 'ன்னு மாத்தி சொல்லிட்டாங்க போலும் !
' மண் குதிரையை நம்பி ஆத்துல இறங்காதே '
மண் குதிரைன்னு தெரிஞ்சபிறகு, எவனாச்சும் அதை நம்பி ஆத்துல இறங்குவானா ? பிறகெதுக்கு இப்படி சொல்றாங்க ? அப்படி கேளுங்க ... அதாவது, ஆத்துக்கு நடுவுல அங்கங்க திட்டுத்திட்டா மண் மேடு இருக்கும் . இந்த மேடுகள ' குதிர் 'னு சொல்வாங்க . ' மேடு ' தானேன்னு போய் அதுல காலை வைச்சா... அவ்வளோதான், அப்படியே உள்ள போயிடும் . அந்தளவுக்கு பலமில்லாதது அந்த மேடுங்க . அதுக்காக ' மண் குதிர நம்பி ஆத்துல இறங்காத'னு சொல்லி வெச்சத்துதான்... மண்ணு குதிரைனு பறக்க ஆரம்பிச்சுடுச்சு .
--- மெய்யழகன் . அவள் விகடன் .15 . 1 . 2010 .
No comments:
Post a Comment