பாம்பின் விஷம், ஏறக்குறைய உமிழ்நீர் போன்றது ; இது விஷப்பொருள் , புரதம், என்சைம்கள் கலந்த கலவை . பாம்புகளைப் பிடித்து விஷத்தை உமிழ வைத்து, அதில் இருந்து புரதம் மற்றும் என்சைம்களைத் தனியாகப் பிரித்தெடுத்து பல வகையான மருந்துகளை உருவாக்குகின்றனர் .
இந்தியா, சினா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் பாரம்பரிய மருத்துவ முறைகளில் பாம்பு விஷத்தை வேறு சில பொருட்களுடன் கலந்து மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர் . பாரம்பரிய மருத்துவத்தின் வாதம், வலிப்பு, மூட்டுவலி, மன படபடப்பு, சுவாசக் கோளாறு, அஜீரணக் கோளாறு ஆகியவற்றைத் தீர்க்கவும் விஷமுறிவு மருந்தாகவும் பாம்பு விஷம் பயன்படுத்தப்படுகிறது .
ஆங்கில மருத்துவத்தில், பாம்பு விஷத்தில் இருந்து விஷமுறிவு மருந்துகள், டென்ஷன் குறைக்கும் மருந்துகள், வலி நிவாரணிகள் தயாரிக்கப்படுகின்றன . ஆனால், இவற்றில் இருந்து சில மருந்துகளை மட்டுமே சர்வதேச மருத்துவக் கவுன்சில் அங்கீகரித்துள்ளது .
புற்று நோய், கட்டிகள், ரத்தக் கோளாறுகளை நீக்கும் மருந்துகளைப் பாம்பு விஷத்தில் இருந்து தயாரிக்கும் முயற்சி பல நாடுகளிலும் தொடர்கிறது .
--- தினமலர் இணைப்பு .டிசம்பர் 3 , 2010 .
No comments:
Post a Comment