டி.வி.ஆன் செய்ததும் ஒளியைவிட ஒலி ஏன் முன்னதாக வருகிறது?
இது மிகவும் நியாயமான சந்தேகம்தான். ஏனென்றால், ஒலியைவிட ஒளி வேகமாகப் பயணம் செய்கிறது என்கிறது அறிவியல். அப்படியானால் டி.வி.செட்டை ஆன் செய்ததும், முதலில் படங்கள்தானே தெரிய வேண்டும். பிறகுதானே ஒலி வரவேண்டும்? ஆனால், இப்படி நேரெதிராக நடப்பதற்குக் காரணம் உண்டு.
தொலைக்காட்சிப் பெட்டியில் உள்ள பிக்சர் டியூப் ( Cathode Ray Tube ) கொஞ்சம் வெதுவெதுப்பான பிறகுதான் திரையில் படங்கள் தெரியும். இதற்கு சிறிது நேரம் பிடிக்கிறது. ஆனால், ஒலிக் கம்பிச் சுற்றுகளுக்கு ( Audio Coils ) மின்னொட்டம் பெற மிகக் குறைவான நேரமே தேவைப்படுகிறது. இதனால்தான் டி.வி. செட்டை ஆன் செய்ததும் முதலில் ஒலி கேட்கிறது!
-- ஜி.என்.எஸ். குட்டீஸ் சந்தேக மேடை.?!
-- தினமலர் சிறுவர்மலர் . ஆகஸ்ட் 30, 2013.

No comments:
Post a Comment