நவக்கிரகங்கள் எல்லாம் நம்மை விட்டுவிலகி, கண்களுக்கு தெரியாதபடி தூரத்தில் இருந்தவாறே நமக்கு பாதிப்பை உண்டாக்கும்.
ஆனால், நம்முடனேயே இருந்து, கண்களுக்கு எதிரில் நடமாடி, நமக்கு பாதிப்பை உண்டாக்கும் கிரகங்கள் உண்டு. அந்த கிரகங்கள் எவை என்று நமது முன்னோர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். குடும்ப ஜோதிடம் எனும் அந்த கிரக வழிபாட்டைப் பார்க்கலாம்.
அப்பா, அம்மாவின் பேச்சை கேட்காத பிள்ளை - அஷ்டமத்தில் சனி.
சற்றும் அஞ்சாமல், வார்த்தைக்கு வார்த்தை, எதிர்த்து நின்று பேசும் மனைவி - இரண்டாம் இடத்தில் அங்காரகன் இருக்கப் பிறந்தவள்.
சொன்ன வார்த்தையைக் கேட்காத பணியாளர் - அஷ்டமத்தில் சந்திரன்.
' என் பங்கை கொடு! நீதிமன்றத்திற்கு வா! என்று வழக்கு தொடுத்து நீதிமன்றத்துக்கு அலைய வைக்கும் தம்பி - லக்னத்தில் சூரியன்.
தர்மம், நீதி என்பவை சிறிதளவு கூட இல்லாமல் வஞ்சனை செய்யும் மூத்த சகோதரன் - மூன்றாம் இடத்தில் வியாழன்.
நம் வீட்டில் பெண் எடுத்து, பெண் கொடுத்து, தினந்தோறும் சண்டை போடும் சம்பந்திகள் - ராகு, கேதுக்கள்.
-- ஸாந்தரானந்தா.
-- தினமலர் வாரமலர். செப்டம்பர் 1, 2013

No comments:
Post a Comment