ஒரு ஊரில் இனிமையாக பாடுவதில் வல்லமை பெற்ற ஒரு புலவர் இருந்தார். அவர் பாடலைக் கேட்க அந்த ஊர் மக்கள் எப்போதுமே விரும்புவார்கள்.
ஒரு நாள் காலை அந்தப் புலவர் கடைத் தெருவுக்கு வந்துகொண்டிருந்தார். அவர் பாடும் இனிமை பற்றி பக்கத்து ஊர்க்காரர்களுக்கு சொல்லிக்கொண்டிருந்தார் அந்த ஊர் ஆசாமி. பக்கத்து ஊர்க்காரர் சரியான கிண்டல் பேர்வழி. சும்மா இருப்பாரா? பாடகரை உசுப்பேத்த நினைத்தார்.
புலவரிடம் ஓடிச்சென்று, அவருக்கு வணக்கம் சொல்லி, " ஐயா, புலவரே, நீங்கள் நல்லாப் பாடுவீங்களாமே ! நான் உங்களைப் ' பாடையில ' பார்க்கணும் " என்றான் குசும்பாக அதாவது ' பாடும்போது பார்க்க வேண்டும் ' என்பதை அப்படிச் சொல்லியிருக்கிறான்.
புலவருக்கு பக்கத்து ஊர்க்காரரின் நக்கல் புரிந்தது. புலவரும் அசராமல், " அப்ப சாகையில வந்து பார் " என்றார். அதாவது ' சாகை' ( ஜாகை ) என்பது இருப்பிடத்தைக் குறிக்கும். வீட்டில் வந்து பார் என்பதை இப்படி அழகாக சிலேடையில் கூறினார் புலவர். நையாண்டி ஆசாமி திகைத்து நின்றான் !
-- தினமலர் . இணைப்பு. செப்டம்பர் 28. 2012.

No comments:
Post a Comment